செய்திகள் :

"`நரேந்திர' என்ற பெயர் பிடிக்கலை..!" - குத்துச்சண்டை வீரர் பகிர்ந்த சம்பவம்; உரக்கச் சிரித்த மோடி

post image

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தனக்கு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அதைக் கேட்டு பிரதமர் மோடி உரக்கச் சிரித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் நரேந்தர் பெர்வால் பங்கேற்றார். அதில் அவருடைய முதல் போட்டியே பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரருக்கு எதிரானது.

ராணுவ விளையாட்டுப் போட்டி என்பதாலும், இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பதற்றம் இருந்ததாலும், 'எக்காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தானிடம் தோற்றுவிடக் கூடாது' என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெர்வாலுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

கடுமையான அந்தப் போட்டியில் நரேந்தர் பெர்வால் வெற்றி பெற்றார். இருப்பினும், போட்டியில் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டதால், தையல் போடுவதற்காக இருவரும் ஒன்றாக மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது பாகிஸ்தான் வீரர் பெர்வாலிடம், 'தம்பி, நான் ஒன்று சொல்லட்டுமா?' என்று கேட்டிருக்கிறார். பெர்வாலும் 'சொல்லுங்கள்' என்று கூறியிருக்கிறார்.

நரேந்தர் பெர்வால்
நரேந்தர் பெர்வால்

அதற்கு அந்த பாகிஸ்தான் வீரர், 'உன் பெயர் நரேந்தர், உனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளரின் பெயர் நரேந்திர ராணா... உங்கள் நாட்டின் பிரதமரின் பெயர் நரேந்திர மோடி... இப்போது எனக்கு 'நரேந்திர' என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது' என்று விரக்தியுடன் கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை நரேந்தர் பெர்வால் பிரதமர் மோடியிடம் விவரித்தபோதுதான், பிரதமர் மோடியால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் உரக்கச் சிரித்திருக்கிறார்.

ஈரோட்டில் குதிரையேற்றபோட்டி - சாகசம் செய்த வீரர்கள்

ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ... மேலும் பார்க்க

ஜார்ஜியாவில் தங்க வேட்டை – சாதனை புரிந்த திண்டுக்கல் மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்பு!

மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரே... மேலும் பார்க்க

GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் 2026; 50,000 டாலர் பரிசு வென்ற பிரக்ஞானந்தா

இந்திய சதுரங்க ஆட்டக்காரர் ஆர்.பிரக்ஞானந்தா GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் (Blitz) 2026 சதுரங்கப் போட்டியில் 35 - 23 என்ற புள்ளிகளை பெற்று இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜவோகிர் சிந்தரோவை வீழ்த... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் கவனம் பெறும் பிக்கிள்பால்... கோலாகலமாகத் தொடங்கியது TNPPL சீசன் 2!

தமிழ்நாட்டில் பிக்கிள்பால் (Pickleball) விளையாட்டைத் தொழில்முறை அளவில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 'Cavin's Tamil Nadu Pickleball Premier League (TNPPL) – Season 2'-ன் தொடக்க விழா... மேலும் பார்க்க

காமன்வெல்த் போட்டி முடிந்ததும் மாயமான பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்; கிளாஸ்கோவில் என்ன நடந்தது?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி (Commonwealth Games 2026) நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த வீரர் குத்ரத்துல்லா (Qudratullah) திடீரென மாயமான சம்பவம் சர்வதேச விளையாட்டு வட்ட... மேலும் பார்க்க

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற திருவாரூர் வீரர் - கொண்டாட்டத்தில் சொந்த கிராம மக்கள்!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த பிரவீன் சித்திரவேல்,ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த்விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல்போட்டியில் வெ... மேலும் பார்க்க