செய்திகள் :

நல்லகண்ணு மறைவு: "ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும்" - சீமான் உருக்கம்

post image

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமாகி இருக்கிறார்.

அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து பேசியிருக்கிறார்.

"மாபெரும் தலைவரை, மகத்தான மனிதரை இந்த நாடு இழந்திருக்கிறது. இந்த நாடு அடிமைப்பட்டு இருக்கும்போது விடுதலைக்காகப் போராடிய வீர இளைஞர்களில் ஒருவர்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

எண்ணற்ற அடக்குமுறை, ஒடுக்குமுறை என எல்லாவற்றையும் கடந்து துளியும் தன்னலம் இல்லாமல் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் அரும்பாடுபட்டவர். எங்களுடைய தலைமுறையினருடனும் போராட்டங்களில் பங்குபெற்ற பெருந்தகை.

எவராலும் குறை சொல்ல முடியாத ஒரு புனிதர். நம்மோடு அவர் இல்லை என்று நினைக்கும்போது மிகுந்த மன வலியாக இருக்கிறது. அவருடன் நெருங்கிப் பழகிய பல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன.

நூறு ஆண்டுகால வரலாறு. ஒரு தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும். எளிமையாக, நேர்மையாக, தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். அவரை இழந்திருக்கிறோம் என்று நினைக்கும்போதே மனம் வேதனையாக இருக்கிறது.

சீமான்
சீமான்

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆறுதல்கள். மகத்தான தலைவருக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல்

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு இன்று காலமானார்.அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரே... மேலும் பார்க்க

ஆபாசப் பேச்சு: ``அவர் கரூர் எஸ்.பி-யா... பாஜக தலைவருக்கு வக்கீலா?" - எம்.பி ஜோதிமணி ஆவேசம்!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் கரூர் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய கரூர்... மேலும் பார்க்க

நல்லகண்ணு மறைவு: "தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்" - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்... மேலும் பார்க்க

"காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருக்கிறது" - கிரிஷ் சோடங்கர் பளீச்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார்.இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் ... மேலும் பார்க்க

`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி

தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், தி.மு.கவுக்கு செக் வைக்கும் ஏற்பாட்டில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ்.ஆட்சியில் பங்கு என்கிற முழகத்... மேலும் பார்க்க