செய்திகள் :

நல்லகண்ணு மறைவு: "தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்" - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

post image

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல்

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு இன்று காலமானார்.அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரே... மேலும் பார்க்க

ஆபாசப் பேச்சு: ``அவர் கரூர் எஸ்.பி-யா... பாஜக தலைவருக்கு வக்கீலா?" - எம்.பி ஜோதிமணி ஆவேசம்!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் கரூர் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய கரூர்... மேலும் பார்க்க

"காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருக்கிறது" - கிரிஷ் சோடங்கர் பளீச்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார்.இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் ... மேலும் பார்க்க

`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி

தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், தி.மு.கவுக்கு செக் வைக்கும் ஏற்பாட்டில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ்.ஆட்சியில் பங்கு என்கிற முழகத்... மேலும் பார்க்க

நல்லகண்ணு : '80 ஆண்டுக்காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர்' - ரஜினி, கமல் இரங்கல்

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு அவர்கள், இன்று தனது 101வது வயதில் காலமானார். அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில... மேலும் பார்க்க