செய்திகள் :

"நவம்பருக்கு பின் ஈரான் மீது கடும் தாக்குதல்" - 'மீண்டும்' அந்தர்பல்டி அடிக்கும்‌ ட்ரம்ப்!

post image

கடந்த வார இறுதியில் ஈரான் போர் குறித்து ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது’ என்று இனிப்புச் செய்தி சொன்னார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கூட ட்ரம்ப், ‘வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடந்து முடிந்ததும் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படும்’ என்று ஓரளவு பாசிட்டிவாகத்தான் பேசியிருந்தார்.

பேச்சுவார்த்தை...

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தனர் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட அதிகாரிகள்.

அங்கே ஈரான் அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

ஈரான் அப்போது...

கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரப் பயங்கரவாதம் உள்ளிட்ட அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

முடக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.

இரு கடலோர அரசாங்கங்களுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையை ஏற்க வேண்டும்

ஆகிய 7 நிபந்தனைகளை அமெரிக்காவிடம் வைத்தது.

ஈரான் போர் முடிப்பதற்கான ஆரம்பப் பணிகளைச் செய்யத் தொடங்கினாலே, அடுத்த 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் அந்தர்பல்டி

எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது என்று தோன்றிய சூழலில், தற்போது மீண்டும் அந்தர்பல்டி அடித்துள்ளார் ட்ரம்ப்.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் ஈரானின் ஒப்பந்தத்தை நிராகரிக்கிறேன்.

போரில் மிகவும் மோசமாகத் தோற்றுக் கொண்டிருப்பதால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை உடனடியாகத் திறந்துவிடக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை அவர்கள் செய்ய விரும்புகிறார்கள்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வர நினைக்கிறார்கள். அது நல்லதுதான் என நான் கருதுகிறேன்.

ஒப்பந்தங்கள் செய்வதில் எனக்கும் விருப்பம்தான், ஆனால்

அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

'நாம் இந்த நீர்ச்சந்தியை மூடி, உலகிற்கே ஒரு பெரிய பிரச்னையை உருவாக்குவோம்’ என்று நினைத்தார்கள்.

ஆனால் நான் உள்ளே வந்து, ராணுவ வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய கடற்படை முற்றுகையை நாம் அங்கு ஏற்படுத்தினேன்.

இதனால் இப்போது அவர்களிடம் கையில் காசே இல்லாமல் போய்விட்டது.” என்று பேசியிருக்கிறார்.

மேலும், மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு, ஈரான் மீதே பெரிய தாக்குதல்கள் நடக்கும் என்று வேறு பேசியிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்குமோ?!

`மகனுடன் சேர்ந்து ஏரி மண் திருட்டு' - திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

கடந்த 14-12-2025 அன்று, தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்கான மாநாடு திருவண்ணாமலை அருகேயுள்ள மலப்பாம்பாடியில் நடைபெற்றது. இதற்கான மொத்த ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவர் அப்போதைய அம... மேலும் பார்க்க

RTI-ல் சட்டம் - ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு - திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு குறித்து பதில் பெற முடியாது என்று தவெக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.சட்டம் ஒழுங்கு இன்டலிஜன்ஸ் கீழ் வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரி... மேலும் பார்க்க

கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் - நிதி நிறுவன தேர்தல் காரணமா..?

தவெக-வின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் முருகானந்தம். இவர் நேற்று இரவு கோடையான் தோட்டம் அருகே காரில் சென்றுள்ளார். கார் இருட்டான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டூவீலரில் வந்த மூன்று நபர்கள்... மேலும் பார்க்க

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம்

தமிழ்நாடு அரசு தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சட்ட ஒழுங்கை நீக்கியுள்ளது.அதாவது, இனி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த எந்தக் கேள்விக்கான பதிலையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின... மேலும் பார்க்க

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி - தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!

தவெக அரசு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துகொள்ளவதை தற்போது நீக்கியுள்ளது.இந்த மாற்றத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்... மேலும் பார்க்க

'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' - மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு

சமீப காலமாக, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவெக அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றன.இந்த நேரத்... மேலும் பார்க்க