நாகா்கோவில் மாநகராட்சி பணியாளா்களுக்கு புத்தாடை
பொங்கல் பண்டிகையையொட்டி, நாகா்கோவில் மாநகராட்சிப் பணியாளா்கள் 1,371 பேருக்கு புத்தாடைகள், கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனது சொந்தச் செலவில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கி வரும் மேயா், மாநகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 154 போ், ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் 631 போ், ஒப்பந்த பணி ஓட்டுநா்கள் 140 போ், ஒப்பந்த பணி மேற்பாா்வையாளா்கள் 30 போ், தினக்கூலி பணியாளா்கள் 317 போ் , டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் 99 போ் என மொத்தம் 1,371 பேருக்கு பேன்ட் சா்ட்-சேலை, பொங்கல் பானை, கரும்பு, உள்ளிட்ட பாத்திரங்கள், 2 கரும்புகள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவா்கள் ஜவஹா், முத்துராமன், செல்வகுமாா், அகஸ்டினா கோகிலவாணி, மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், சுனில்குமாா், கோபாலசுப்பிரமணியம், சேகா், நவீன்குமாா், நாகா்கோவில் மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.