செய்திகள் :

நாகை: டிட்வா புயலால் இரவு முழுவதும் தொடர்ந்த மழை - கரையில் நிறுத்தப்பட்ட 3,700 மீன்பிடி படகுகள்

post image

இலங்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் டிட்வா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும், கடலோர மாவட்டங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

நாளை அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, நாகை மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை அருகே வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினத்தில் நேற்று பகல் பொழுதில் தரைக்காற்று வேகமாக வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

மழை நீர் புகுந்தது

இதையடுத்து நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்து பல இடங்களில் கன மழை பெய்தது. தற்போதும் மழை தொடர்கிறது. இதனால் நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இங்கு சுமார் 50 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். கனமழை தொடர்ந்தால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் நிலை ஏற்படும் என்கிறார்கள்.

டிட்வா புயல் மழை

இது குறித்து மீனவர்கள் உள்ளிட்ட சிலரிடம் பேசினோம், `டிட்வா புயலால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தை பொறுத்தவரை கோடியக்கரை, வேதாரண்யம், வேளாங்கண்ணி பகுதிகளில் மழை அதிகளவில் பெய்துள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் நாகையில் சம்பா, தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மேலும் மழை தொடர்ந்து வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதே போல், நாகை மாவட்டத்தில் 580 விசைப்படகுகள், 3,200 பைபர் படகுகள் உள்ளன. டிட்வா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மீன் வளத்துறை அறிவித்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் கரை திரும்பி விட்டனர். இதிதொடர்ந்து, விசை மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மறு அறிவிப்பு வந்த பிறகே கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இங்கு புயல் வந்தடைந்தால் காற்று அதிகமாக இருக்கும் கடல் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுக்காப்பு ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்துள்ளது” என்றனர்.

சில விலங்குகள் தங்கள் குட்டிகளையே சாப்பிடுவது ஏன் தெரியுமா?

விலங்குகள் சில நேரங்களில் தங்கள் சொந்தக் குட்டிகளையே கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. சுவீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அனீஷ் போஸ் இது குறித்துக் கூறுகையில், "தங்கள் கு... மேலும் பார்க்க

``பொன்னென மின்னும், கண்களைப் பறிக்கும்'' - 175 ஆண்டுகளுக்குப் பின் மாயப்பூ; ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலைக்கு வருகை தந்திருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான ராபர்ட் வைட் என்பவர், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் ‘Campbellia aurantiaca’ என்ற ஒட்ட... மேலும் பார்க்க

துருக்கியின் தானியக் களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகள்! - கோன்யா சமவெளியின் பகீர் பின்னணி?

துருக்கியின் மத்திய அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி (Konya Plain) அந்நாட்டின் 'தானியக் களஞ்சியம்' என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் கோதுமை, சோளம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sugar beet) போன... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அணைப்பட்டி வைகை ஆற்றில் ஆடைக் கழிவுகள்; தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் | Photo Album

வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வை... மேலும் பார்க்க

முதுமலை: `கூண்டுக்குள் சிக்கிய வயதான ஆண் புலி' - அடுத்தக்கட்ட நடவடிக்கையில் வனத்துறை தீவிரம்

வங்கப் புலிகளுக்கான வாழிடப் போதாமை பிரச்னைகள் அதிகரித்து வரும் நீலகிரியில் மனித - புலி எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதக்கணக... மேலும் பார்க்க

'பார்க்க விமானம்போல இருக்கும்; ஆனால், ஒரு காருக்குத்தான்' - இது ஊர்க்குருவிகளின் கதை!

மழை பெய்து முடித்த நாள்களில், வானம் வெறித்துவிட்டதா என அண்ணாந்துப் பார்க்கையில், உயரத்தில், சிறு புள்ளிகள்போல தெரிகிற பறவைக்கூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா..? கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுகிற... மேலும் பார்க்க