செய்திகள் :

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டும் மத்திய அரசு - கவனம் பெறுவது எதனால்?!

post image

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் நவம்பர் 30-ம் தேதியும், மாநிலங்களவையில் டிசம்பர் 2-ம் தேதியும் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இருப்பினும், இந்தக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் அமர்வுகள் முடிவடைந்து 105 நாள்கள் கடந்த நிலையிலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதை இன்னும் முறையாக முடிக்கவில்லை.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் போது, 2023 மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும், தொகுதி மறுவரையறை செய்வதற்கு ஏதுவாக '2026 அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதாவை' பாஜக தலைமையிலான அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சட்ட முன்வரைவுகளில் ஒன்றான இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டன.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பலம் இல்லாததால், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாலேயே, மழைக்காலக் கூட்டத்தொடரை முறையாக முடிக்காமல் வைத்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. புதிய கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டுமானால் குறைந்தபட்சம் 14 நாள்கள் முன்னறிவிப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதியே குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``தவெக ஆட்சியைக் கலைக்க வேண்டும்; ஆளுநர் அர்லேகர் சொன்ன பதில்..!" - நயினார் நாகேந்திரன்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது. ஆனால், அந்த உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப் ... மேலும் பார்க்க

``வட கர்நாடகா தனிமாநில கோரிக்கை 5 - 10 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறும்" - பாஜக எம்.எல்.ஏ பேச்சு

வட கர்நாடகாவைத் தனி மாநிலமாகப் பிரிக்கும் கோரிக்கை, 5 முதல் 10 ஆண்டுகளில் நிஜமாகும் வாய்ப்பு உள்ளது என கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ பாலச்சந்திர ஜர்கிஹொலிக் தெரிவித்திருக்கிறார். அரபாவ் தொகுதி எம்.எல்.ஏ-வா... மேலும் பார்க்க

`` `திறந்துதான் பாருங்களேன்னு' சொன்னாங்க; இப்போ அடித்தளமே ஆடிப்போய் கிடக்குது..!"- முதல்வர் விஜய்

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``வாழ்... மேலும் பார்க்க

``ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா? நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா?" - திருமாவளவன் கேள்வி

ஆட்சியர் விவகாரத்தை தொடர்ந்து பேசிவருவதன் மூலம் ஆட்சியருக்கு நெருக்கடியை உள்ளாக்குகிறார்களா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மாவட்ட ஆட்சியருக்கு... மேலும் பார்க்க

`பாஜக-வின் துரந்தர் மாணிக்கம் தாகூர் ... பனையூர் பங்களாவுக்கு வாட்ச்மேன்!" – தமிழன் பிரசன்னா காட்டம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநரைச் சந்தித்திருக்கும் உதயநிதியை, கிண்டலாக விமர்சித்திருக்கும் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுத்துள்ளது தி.மு.க தரப்பு!கள்ளக்குற... மேலும் பார்க்க

``ஒருதலைபட்சமான தீர்ப்புகள்; நாட்டின் அமைதி சீர்குலையும் அபாயம்"- விசிக எழில் கரோலின் பேட்டி

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என கடந்த ஆண்டு முதல் சர்ச்சை தொடங்கியது. இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை குலைக்க திட்டமிடுவதாக விசிக, சிபிஐ உள்ளிட்ட தவெ... மேலும் பார்க்க