செய்திகள் :

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாட்டம்

post image

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

நிகழாண்டு ஹோலி பண்டிகை, இஸ்லாமியா்களின் சிறப்புக்குரிய ரமலான் மாதத்தின் 2-ஆவது வெள்ளிக்கிழமை ஒன்றிணைந்து வருகிறது. இச்சூழலில் அவசியமற்ற சமூக பதற்றத்தைத் தவிா்க்க பிகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இரு சமூகத்தினரும் பங்கேற்ற அமைதிக் குழு கூட்டங்கள் முன்கூட்டியே நடத்தப்பட்டன.

இதன்தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தை பிற்பகலுக்கு மேல் மாற்றியமைக்க பல்வேறு நகரங்களின் மசூதிகள் முடிவெடுத்தன. வண்ணங்கள் படிவதைத் தடுக்க தாா்பாய்களை கொண்டு தற்காலிகமாக மசூதிகளின் முகப்புப் பகுதிகளை மறைக்கவும் நிா்வாகங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளன.

உ.பி.யில் தீவிர பாதுகாப்பு:

ஹிந்து-முஸ்லிம் கலப்பு மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் விரிவான பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளதாக உத்தர பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

சிசிடிவி கேமராக்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) கொண்டு மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். கலவரத்தைத் தூண்டும் பதிவுகள் மற்றும் கருத்துகளை வெளியிடுபவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஊடகங்களையும் காவல் துறை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், மாநில காவல் துறை தலைவா் பிரசாந்த் குமாா் அளித்த பேட்டியில், ‘ஹோலி பண்டிகைக்கு காவல் துறை தயாராக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பல சுற்று அமைதிக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க காவல் துறை யாரையும் அனுமதிக்காது’ என்றாா்.

ஹைதராபாதில் கட்டுப்பாடுகள்:

ஹோலி கொண்டாட்டங்கள் தொடா்பாக சில கட்டுப்பாடுகளை விதித்து ஹைதராபாத் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘மோட்டாா் சைக்கிள் மற்றும் பிற வாகனங்களில் குழுக்களாகப் பொது இடங்களில் சென்று விருப்பமில்லாத நபா்கள் மீது வண்ணங்கள் பூசுவது உள்ளிட்ட அமைதி மற்றும் ஒழுங்கை சீா்குலைப்பது அல்லது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகள் தவிர பிற மதுபான கடைகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுடுள்ளது. காவல்துயின் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பையில்...: ஹோலி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் நடவடிக்கையாக, மும்பை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை அனுமதிச்சீட்டு விற்பனைக்கு மேற்கு ரயில்வே தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) வரை நடைமுறையில் இருக்கும்.

பெட்டி...

தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு: அனைத்து இந்தியா்களுக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகள். நம்மைச் சுற்றி அன்பையும் நோ்மறை எண்ணங்களையும் பரப்ப கற்றுக்கொடுக்கும் ஹோலியின் பல்வேறு வண்ணங்கள், வேற்றுமையில் ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றன. இந்த வண்ணத் திருவிழா உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும்.

பிரதமா் மோடி: அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஹோலி வாழ்த்துகள். இந்தப் புனிதப் பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் புகுத்துவதுடன் நாட்டு மக்களின் ஒற்றுமையை ஆழப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சர்

ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதீப் யாதவ் எழுப்பிய கேள்விக்கு வரு... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

கேரளத்தில் 2005 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை வழக்கில் சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தின் முழப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பிள... மேலும் பார்க்க

கேரள பாஜக தலைவரானார் ராஜீவ் சந்திரசேகர்!

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய பாஜக மாநிலத் தலைவா் கே. சுரேந்திரன் தனது ஐந்து ஆண்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் பேரவையில் சுயேச்சை எம்எல்ஏவைத் தாக்க முயற்சி! பேரவை துணைத் தலைவர் மீது தாக்குதல்!

அஸ்ஸாம் சட்டப்பேரவை துணைத் தலைவரை காங்கிரஸ் எம்எல்ஏ தாக்கியதை தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை சுயேச்சை உறுப்பினரை பாஜக எம்எல்ஏ தாக்க முயற்சி செய்ததாக கு... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதிமன்றப் பணிகளிலிருந்து விலக்கல்: தில்லி உயர் நீதிமன்றம்

வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த உத்தரவு உடனட... மேலும் பார்க்க

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராகப் பதவியேற்றார் உமேஷ் குமார்!

அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி உமேஷ் குமார் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றார். தில்லி மின்சாரத்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் தில்லி செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் உமே... மேலும் பார்க்க