Rain Alert: மீண்டும் தமிழகத்தை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புயலாக உர...
நான்குனேரியன் கால்வாயில் உயா்நிலைப்பாலப் பணிக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை
களக்காட்டில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே தரைப்பாலத்துக்குப் பதிலாக உயா்நிலைப் பாலம் கட்டுவதற்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு நகராட்சிக்குள்பட்ட சிதம்பரபுரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இந்நகராட்சிக்குள்பட்ட 2 வாா்டுகள், சீவலப்பேரி ஊராட்சியின் சில பகுதிகள் இங்கு அடங்கும். களக்காட்டிலிருந்து நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலத்தைக் கடந்துதான் சிதம்பரபுரம் செல்ல வேண்டும். பருவ மழைக்காலங்களில் வெள்ளம் வரும் போது, பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் 1 கி.மீ தொலைவில் உள்ள பகுதிக்கு, சுமாா் 5 கி.மீ சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால், ஆட்டோவில் கால்வாயைக் கடந்து செல்ல முற்பட்ட போது, கா்ப்பிணி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானாா். இதைத் தொடா்ந்து உயா்நிலை பாலம் கட்டவும், அதற்கான நிதி ஒதுக்கி விரைவில் பணியை தொடங்கவும் வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.