செய்திகள் :

’நான் தன்னந்தனி ஆளு’ - மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த தவெக கட்சி பாடலால் சர்ச்சை!

post image

கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன குமார், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நிகழ்வில் பேசிவிட்டு வரும்போது, த.வெ.க-வின் கட்சி பாடல் ஒளிபரப்பப்பட்டது.

இதேபோல இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து  கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி டீன் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா

இந்த நிகழ்வு தூங்குவதற்கு முன்னரே முதல்வர்  விஜய், நடிகராக இருந்த போது நடித்த படங்களின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பட்டமளிப்பு விழா துவங்கியது. மாணவர்கள் ஒவ்வொருவராகத் தங்களது பட்டங்களைப் பெற மேடை நோக்கி வந்தபோது, ”நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு கொஞ்ச நகுந்தேனா எட்டு கோடி பேரு” என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாடல் மிக உரத்த சத்தத்துடன் ஒலிக்கவிடப்பட்டது.

மேடையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் முன்னிலையிலேயே, த.வெ.க கட்சிப் பாடல் மற்றும் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டதற்கு எதிர்க்

கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர

ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் வழித்தடம்! - என்ன காரணம்!

மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. லெபனான்... மேலும் பார்க்க

ஹார்முஸ் நீர்ச்சந்தியை 'மீண்டும்' மூடிய ஈரான் - ஏன்?; சுங்க வரி ஈரான் வசூலிக்கலாமா? - ட்ரம்ப் பதிவு

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின்னும், நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் - இஸ்ரேல் லெபனான் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதலே. புர... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த கப்பல் மாலுமி; மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்

ஓமன் நாட்டின் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ”எம்.டி செலஸ்டியல்” என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் (வயது 35) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, ... மேலும் பார்க்க

‘மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?’ – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் பார்ப்பது தொடர்பாக வந்திருக்கிற... மேலும் பார்க்க

GenZ DMK Vs 2K ADMK: இளைஞர்களைக் கவரும் போட்டியில் திராவிடக் கட்சிகள்!

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அரசியலில் மிகவும் தெளிவாக தெரியும் ஒரு மாற்றம் என்றால், அது இளைஞர்களை நோக்கிய அரசியல் நகர்வுகள்தான். தேர்தல் வெற்றிக்கு பிறகு, இளைஞர்களின் ஆதரவை பெற்றால்தான் அரசியலில் ... மேலும் பார்க்க

சங்கராபுரம் MLA அலுவலகத்தை திறந்து வைக்கும் சி.வி; இபிஎஸ் படம் இல்லாத அழைப்பிதழ் - தொடரும் சலசலப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், சங்கராபுரம் ... மேலும் பார்க்க