ஓமனில் உயிரிழந்த கப்பல் மாலுமி; மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்ச...
’நான் தன்னந்தனி ஆளு’ - மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த தவெக கட்சி பாடலால் சர்ச்சை!
கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன குமார், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நிகழ்வில் பேசிவிட்டு வரும்போது, த.வெ.க-வின் கட்சி பாடல் ஒளிபரப்பப்பட்டது.
இதேபோல இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி டீன் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு தூங்குவதற்கு முன்னரே முதல்வர் விஜய், நடிகராக இருந்த போது நடித்த படங்களின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பட்டமளிப்பு விழா துவங்கியது. மாணவர்கள் ஒவ்வொருவராகத் தங்களது பட்டங்களைப் பெற மேடை நோக்கி வந்தபோது, ”நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு கொஞ்ச நகுந்தேனா எட்டு கோடி பேரு” என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாடல் மிக உரத்த சத்தத்துடன் ஒலிக்கவிடப்பட்டது.
மேடையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் முன்னிலையிலேயே, த.வெ.க கட்சிப் பாடல் மற்றும் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டதற்கு எதிர்க்
கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர









