செய்திகள் :

நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் விலையேற்றம்; கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலை 25% உயர்வு!

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். சுத்த கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் உள்ள இந்த நிலக்கடலைகளை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் உலக பிரசித்தி பெற்றது. இந்தக் கடலை மிட்டாய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

கடலைமிட்டாய்

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அதன் பின்னர் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது கடலைமிட்டாய் தயாரிப்பின் மூலப்பொருள்களான நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக கடலைமிட்டாய் குறுங்குழும கட்டடம் கட்டப்பட்டு வரும் இடத்தில் கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மூலப்பொருள்கள் விலை உயர்வு காரணமாக கடலைமிட்டாய் விற்பனை விலையை 25 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. 

கடலைமிட்டாய் உற்பத்தி

இதுகுறித்து சங்க செயலாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடலை மிட்டாய் உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளான நிலக்கடலை, வெல்லம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. மேலும் பேக்கிங் கவர்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதாவது 80 கிலோ கொண்ட நிலக்கடலை மூட்டை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.9,680 என விற்பனையானது. இது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது ரூ.12,500 என விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், 3 மாதங்களுக்கு முன்பு ரூ.1,300 என இருந்த 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லத்தின் விலை, தற்போது ரூ.2,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏலக்காயின் விலையும் ரூ.2,200-ல் இருந்து ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கடலை மிட்டாய் தயாரிப்பதையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தை சமாளிப்பது தொடர்பாக கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் ஆலோசனை நடத்தினோம்.

கடலைமிட்டாய்

இதில், கடலை மிட்டாயின் தற்போதைய விலையிலிருந்து 25 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுத்துள்ளோம். ஒரு கிலோ கடலைமிட்டாயின் விலை 220 ரூபாய் என்பதை 275 ஆக உயர்த்தியுள்ளோம். நிலக்கடலையின் விலை குறைந்தால் கடலைமிட்டாயின் விலை குறைக்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த விலை ஏற்றம் தடுக்க முடியாத ஒன்று. இதனை பொதுமக்களும் வியாபாரிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.

தாயின் கனவை நனவாக்கிய GenZ மகள் - அசத்தும் சீர் தட்டுகள் டெக்கரேஷன் பிசினஸ்!

தன் தாயின் கனவுகளை நனவாக்குவதற்காக, GenZ மகள் புதிதாக ஒரு பிஸினஸைத் தொடங்கியுள்ளார்.பெயர் மித்ர ப்ரத்திகா, முதுகலை இயற்பியல் படித்து வருகிறார்.தனது அம்மாவின் புதைந்த கனவுகளை மீட்டெடுத்து, கோயம்புத்தூர... மேலும் பார்க்க

"AI-ல் 'இதை' படிங்க" - 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் ஆயுஷ் சிங்-ன் அட்வைஸ்!

எங்கும், எல்லாவற்றிலும் ஏ.ஐ., என்று இப்போது உலகம் மாறி வருகிறது. ஒரு லேப்டாப், விட்டுவிட்டுக் கிடைக்கும் இன்டர்நெட் கனெக்ஷன், ‘சாதித்துவிட வேண்டும்’ என்கிற ஆர்வம் ஆகிய மூலதனத்தை வைத்து ஏ.ஐ., உலகில் தன... மேலும் பார்க்க

ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் வெடித்த அரசியல், இனவாத சர்ச்சை... என்ன நடக்கிறது?

உலகளாவிய சூழல், எரிபொருள் செலவு, அதிகரிக்கும் விமானப் போக்குவரத்துச் செலவு, மெர்ஜரால் ஏற்பட்ட தாக்கங்கள் போன்ற காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் இறங்குமுகத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த... மேலும் பார்க்க

மதுரையில் GRT ஜூவல்லர்ஸ் 68-வது ஷோரூம் திறப்பு – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகள்!

மதுரை அண்ணா நகரில் 68-வது ஷோரூமை திறந்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், மதுரையில் தனது இரண்டாவது ஷோரூமைத் தொடங்குவதன் மூலம், வளர்ந்து வரும் தனது பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.ஆறு தசாப்தங... மேலும் பார்க்க

Bombay Creamery: ஐஸ்க்ரீம் சந்தையில் கால் பதித்த ரிலையன்ஸ்… ₹10-ல் தொடங்கும் புதிய போட்டி

இந்தியாவின் ஐஸ்க்ரீம் சந்தையில் களமிறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான Reliance Consumer Products Limited (RCPL), ‘Bombay Creamery’ என்ற புதிய ... மேலும் பார்க்க

கடனால் அனைத்தையும் இழந்த பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்: மீண்டும் வேலைக்கு செல்லும் தொழிலதிபர்

நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் கடன் தொல்லையால் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கையிக்கு செல்கிறது. ரிலையன்ஸ் மொபைல் உரிமையாளரான அனில் அம்பானிக்கு சொந்தமான பல நிறுவனங்கள் அது போன்று த... மேலும் பார்க்க