செய்திகள் :

புதுச்சேரி: `மாநில அந்தஸ்துக்காக ராஜினாமா செய்யத் தயார்!' – பேரவையில் சீறிய முதல்வர் ரங்கசாமி

post image

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார், ``புதுச்சேரிக்கு வருவாய் குறைவாக இருப்பதால் சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், நேயம் மக்கள் கழக எம்.எல்.ஏ நேரு உள்ளிட்டவர்கள், ``புதுவைக்கு மாநில அந்தஸ்துதான் வேண்டும். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதில் மாறுபட்டிருந்தால் கோரிக்கை பலவீனமடையும்" என்றனர்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், ``இந்த சபையின் எதிர்ப்பை பதிவு செய்ய, சபாநாயகர் சபையை ஒத்திவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், ``சபையை ஏன் ஒத்திவைக்க வேண்டும்? புதுவை மக்களுக்காக உங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பை காட்டுங்கள்" என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார், ``நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்" என்றார்.

புதுச்சேரி சட்டப்பேரவை

அப்போது அவருக்கு ஆதரவாக ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தாங்களும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறினர். அதையடுத்துப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ``புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எவ்வளவு முக்கியம் என்பதும், அவசியம் என்பதும் எனக்கு தெரியும். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு  தயார். மாநில அந்தஸ்தை நாம் பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை. அப்படி இருந்தால்தான் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். மாநிலம் வளர்ச்சி பெற மாநில அந்தஸ்து கட்டாயம் தேவை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது" என்றார்.

Belonging: A Journey of Love: சோனியா காந்தியின் புத்தகம்: வெளியீட்டுக்கு முன்பே மாறும் பதிப்பகம்!

சோனியா காந்தியின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணங்களைப் பதிவு செய்துள்ள ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) தன்வரலாற்றுப் புத்தகம், வரும் நவம்பர் 10-ம் தேதி உலகளவில் வெளியாகிறத... மேலும் பார்க்க

"கார் ரேஸ் பற்றி இங்கு ஒரு விவாதம் வருகிறது, ஆனால்.!"- உதயநிதி vs செங்கோட்டையன்

சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை ஆற்றுவதற்கு அரசின் சார்பாக வாகனங்கள் வழங்குகின்ற போது அதற்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது. நீங்கள் எத்தனைக் ... மேலும் பார்க்க

`நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ - அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகிறதா? என்ன பிரச்னை? அவர்களுடைய அடுத்தக்கட்டம்?

விரைவில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகின்றன என்கிற தகவல் பரவி வருகிறது. அமெரிக்காவில் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்காக B1 மற்றும் B2 விசாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த வ... மேலும் பார்க்க

சொத்துவரி விவகாரம்: கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர்; சரண்டர் ஆன சென்னை மாநகராட்சி ஆணையர்! -

சென்னையில் சொத்துவரி மறுமதிப்பீடு செய்யப்பட்ட விவகாரத்தை இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேலு எழுப்பினார். அவரின் கேள்விக்கு 'இனி எந்த முடிவையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி... மேலும் பார்க்க

'சென்னை முழுவதும் குடிநீரில் மலம் கலப்பு' - திமுக கவுன்சிலரின் பகீர் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் பேசுகையில், ''சென்னை முழுவதும் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்த... மேலும் பார்க்க