செய்திகள் :

சொத்துவரி விவகாரம்: கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர்; சரண்டர் ஆன சென்னை மாநகராட்சி ஆணையர்! -

post image

சென்னையில் சொத்துவரி மறுமதிப்பீடு செய்யப்பட்ட விவகாரத்தை இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேலு எழுப்பினார். அவரின் கேள்விக்கு 'இனி எந்த முடிவையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்' என சரண்டர் ஆகியிருக்கிறார், சென்னை மாநகராட்சி ஆணையர்.

மாநகராட்சி மன்றம்
மாநகராட்சி மன்றம்

திமுக கவுன்சிலர் வேலு பேசுகையில், 'சென்னையில் திடீரென சொத்துவரியை உயர்த்தலாம் என எந்த அடிப்படையில் முடிவெடுத்தீர்கள்? யாரிடம் ஆலோசித்து அந்த முடிவை எடுத்தீர்கள். மேயரிடமும் துணை மேயரிடமும் நீங்கள் ஆலோசிக்கவில்லை. மாமன்றத்தில் அந்தத் தலைப்பில் விவாதிக்கவில்லை.

நகராட்சி நிர்வாகத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரிடமாவது சொத்துவரி உயர்வு குறித்து தெரிவிக்கப்பட்டதா? இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? கவர்னரால் ஆளப்படும் அரசா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத போது அதிகாரிகள் முடிவெடுக்கலாம். பிரதிநிதிகள் இருக்கும்போது இப்போது எப்படி அதிகாரிகளே முடிவெடுத்தீர்கள்? சொத்து வரி உயர்வு யாரால் எடுக்கப்பட்ட முடிவென தெரிந்தே ஆக வேண்டும்' என்றார்.

சமீரன்
சமீரன்

இதற்கு பதில் அளித்த ஆணையர் சமீரன், 'அது நிர்வாகரீதியாக ஆணையரால் எடுக்கப்பட்ட முடிவுதான். சொத்து வரியை உயர்த்தவில்லை. முறையாக மறுமதிப்பீடுதான் செய்தோம். மக்களின் கோரிக்கையை ஏற்று இப்போது அதை நிறுத்தியும் வைத்திருக்கிறோம்' என்றார்.

'மாமன்றத்தில் விவாதிக்காமல் எப்படி அதிகாரிகளே முடிவெடுக்க முடியும்?' என வேலு மறுபடியும் கேட்க, 'இனி எந்த விஷயமாக இருந்தாலும் மாமன்றத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்' என்றார்.

'சென்னை முழுவதும் குடிநீரில் மலம் கலப்பு' - திமுக கவுன்சிலரின் பகீர் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் பேசுகையில், ''சென்னை முழுவதும் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்த... மேலும் பார்க்க

"என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!"- வன்னிஅரசுக்கு உதயநிதி பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் வன்னிஅரசு, ... மேலும் பார்க்க

"காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை.!" - ஸ்டாலின்

திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதி... மேலும் பார்க்க

திமுக-வில் புதிய மாற்றம்; மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஸ்டாலினின் அறிவிப்பு என்ன?

திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திராவிட ம... மேலும் பார்க்க

"நாங்க பட்டாணி சாப்பிடவா வந்திருக்கோம்? வாங்க ராஜினாமா பண்ணுவோம்"- கொந்தளித்த சென்னை பாஜக கவுன்சிலர்

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 'கூண்டோடு ராஜினாமா செய்வோம்' எனப் பேச பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் அதை ஆதரித்து பேசின... மேலும் பார்க்க

கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன?

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.ம... மேலும் பார்க்க