Nepal Flash Flood | நதி தன் பாதையை மாற்றுமா? கோசி என்னும் "துயர ஆறு" | Decode
கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன?
சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதுசம்பந்தமாகப் பேசிய துணை மேயர் மகேஸ் குமார், "மாநகராட்சியின் திட்டங்களை நிறைவேற்ற போதுமான அளவு நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை. கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை அளிக்கவில்லை. வேளச்சேரி மேம்பாலம் உட்பட முக்கியமான திட்டங்களை அரசு முடக்கியிருக்கிறது. ஒப்பந்தத்தாரர்கள் அவர்கள் செய்த பணிகளுக்கான பில் க்ளியர் ஆகவில்லை எனக் கூறி விளம்பரம் கொடுத்திருக்கின்றனர்.
அம்மா உணவகம் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் பெருமிதமாகப் பேசுகின்றனர். சென்னையில் அம்மா உணவம் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் அம்மா உணவகத்துக்காகச் செலவளிக்கிறோம்.
காலை உணவுத்திட்டம் தனியார் நிதி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. அந்தப் பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்வதற்கான வாகன செலவைக் கூட மாநகராட்சிதான் ஏற்றிருக்கிறது. அதற்காகவாது நிதியை விடுவிக்க வேண்டும். நிதி விடுவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறோம்.

நிதி நெருக்கடியில் இருக்கிறோம் எனக் கூறி 21,000 கோடி கடன் வாங்கி தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றுகிறது. எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுக்கிறோம் என்றெல்லாம் அறிவிக்கிறார்கள். அதேமாதிரி, மாநகராட்சிக்கும் முதல்வரிடம் கூறி சிறப்பு நிதியை விடுவிக்க வேண்டும். மேயர் பிரியா இதுசம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக முதல்வருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். மாநகராட்சி ஆணையர் நகராட்சி நிர்வாகத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரிடம் பேசி நிதியைப் பெற்று வாருங்கள்" என்றார்.

















