செய்திகள் :

"பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், "என்னை வெற்றி பெறவைத்த என் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த வெற்றி என்பது மக்களின் வெற்றி.

இந்த வாய்ப்பு என்பது மக்கள் தளபதி மீது கொண்டுள்ள மாபெரும் நம்பிக்கை. பேரவை தலைவர் அவர்களே, நீங்கள் புரட்சி தலைவரின் ரசிகர் என்று தெரியும்.

அமைச்சர் சம்பத்குமார்
அமைச்சர் சம்பத்குமார்

ஒரே ஒரு பாடல் மட்டும் பாடி கொள்கிறேன். இந்தப் பாடல் எதிர்க்கட்சித் தலைவருக்கு பிடிக்கும் என்று தெரியும். "தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று... அதை நான் நாடறிய சொல்லட்டுமா? இன்று... தெரு தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு. ஊரார் தெரிந்துக்கொள்ள படம் பிடிப்பார் சுயநலமுண்டு..." அப்போதே ரீல்ஸைப் பரப்பி இருக்கிறார்கள் என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாடியிருக்கிறார்" என்று அமைச்சர் சொன்னதும் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே எழுந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "புரட்சித் தலைவர் பாடலைத்தான் பாடினாரே தவிர வேறு எந்த அர்த்தத்துடனும் எங்கள் அமைச்சர் பேசவில்லை. ரசிகராகப் பாடியிருக்கிறார். அதனைக் குற்றமாக எடுத்துக்கொள்ளக்கூடாது" என்றார்.

தொடர்ந்து, "பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சொன்னார்.

தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்

பிறகு எழுந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் நேற்றே பதிலுரையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இன்றுதான் ஆரம்பித்திருக்கிறார். இதில் பாட்டு வேறு பாடுகிறார்.

சாட்சிக்கு என்னை அழைத்திருக்கிறார். அதனால் நாங்கள் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்கு எங்களைப் பேச நீங்கள் அனுமதிக்க வேண்டும் பேரவை தலைவர் அவர்களே" என்று கூறினார்.

‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?

தற்போது அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர வரி விதித்துள்ளன. இந்த நிலையில், இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக்கும் விதமாக, ஒன்டாரியோ ஏரியை ‘அமெரி... மேலும் பார்க்க

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" - கர்நாடக முதல்வர்

கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பின், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மேகதாது அணைப் பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. இந்த அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ண... மேலும் பார்க்க

'புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ - பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரு... மேலும் பார்க்க

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்... நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை பற்றி உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ‘Reimagining Skills for Viksit Bharat @2047’ என்ற அந்த ... மேலும் பார்க்க

'பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?' - அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி!

அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், 'நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத... மேலும் பார்க்க

'திமுக அரசு மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டத்தை முடக்கியது!- ஆதவ் ஆவேசம்!

சமூகநீத்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. இந்த விவாதத்தின் போது 'அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம்' குறித்து கடும் வாக்குவாதம் எழுந்தது. கோவி.செழியன்திமுக முன்... மேலும் பார்க்க