செய்திகள் :

மேற்கு வங்க மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்; 3 வாரத்தில் 60 பேர் இறப்பு

post image

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதத்தில் குழந்தைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து வருகின்றன.

இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் புதிதாக பிறந்து சில நாட்களில் 10 குழந்தைகள் இறந்துள்ளன. அதோடு இந்த மாதத்தில் முதல் மூன்று வாரத்தில் மட்டும் 60 குழந்தைகள் இறந்துள்ளன. ஆனால் அவற்றில் 44 குழந்தைகள் பிற மருத்துவமனைகளில் பிறந்து, பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டவர்கள் ஆவர்.

மீதமுள்ள 16 குழந்தைகள் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து இறந்தனர். இதையடுத்து மாநில சுகாதாரத்துறை இது குறித்து முறையாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

மால்டா அரசு மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் பிற மருத்துவமனையில் பிறந்து மால்டா அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை அனுப்பிய மருத்துவமனைகளை முழுமையாக ஆய்வு செய்ய மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

மால்டா மருத்துவக் கல்லூரி
மால்டா மருத்துவக் கல்லூரி

மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வர் டாக்டர் பிரசென்ஜித் இது குறித்து அளித்த பேட்டியில், ''ஒரே நாளில் இறந்த 10 குழந்தைகளில் எட்டு குழந்தைகள் வெளியில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டவை. இரண்டு மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிறந்தன. குறைவான பிறப்பு எடை, மூச்சுத்திணறல், மஞ்சள் காமாலை மற்றும் இதயம் தொடர்பான வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரச்னைகளால் இந்த இறப்புகள் ஏற்பட்டன.

இது பெரும்பாலும் முன்கூட்டிய அல்லது சிக்கலான பிரசவங்களிலிருந்து உருவாகும் பிரச்னைகள் ஆகும். இது குறித்து சுகாதாரத்துறைக்கு முதல் கட்ட அறிக்கை அனுப்பபட்டுள்ளது'' என்று கூறினார்.

சுகாதார அதிகாரிகள் இதுவரை 16 மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில் ஆய்வு செய்துள்ளனர். தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு உள்ளதா என்பதையும், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான தற்போது குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

"ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம்" - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்றும், மராத்தி தெரியாத ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில போக்குவரத்து துறை அறிவித்தது. அத... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: பிரபலங்கள் சங்கமிக்கும் மேடை! நீங்களும் கலந்துக்கொள்ளலாம்; எப்படி தெரியுமா?

டிஜிட்டல் உலகின் திறமையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் விகடன் டிஜிட்டல் விருதுகள் வழங்கப்படவுள்ளன. முதல் முறையாகக் கடந்த ஆண்டு விகடன், டிஜிட்டல் விருதுகள் நிகழ்வைப் ... மேலும் பார்க்க

பாரம்பரியத்தின் அழகு, புதுமையின் அனுபவம்! தங்கமயில் ஜுவல்லரியின் சென்னையின் புதிய கிளைகள்!

சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிக மையங்களான முகப்பேர் மற்றும் புரசைவாக்கத்தில் தங்கமயில் ஜுவல்லரி தனது புதிய கிளைகளை ஆகஸ்ட் 23 அன்று திறந்து, தரம் மற்றும் பாரம்பரியத்தை இன்னு... மேலும் பார்க்க

`ஒரு எருமை மாட்டுக்கு உரிமை கோரும் இருவர்' - உரிமையாளரை முடிவு செய்ய டி.என்.ஏ. சோதனை

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் அட்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுர் என்ற கிராமத்தில் ஒரு எருமை மாட்டிற்கு இரண்டு பேர் உரிமை கோருவதால் பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இதே பகுதியை சேர்ந்த ச... மேலும் பார்க்க

திருடுபோன Grey Parrot; கைகொடுத்த மைக்ரோசிப் - 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்த செல்லக் கிளி!

இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் மோர்டிமர் என்பவர், தனது செல்லக் கிளியான ‘பார்னி’யை Grey parrot 9 ஆண்டுகளுக்கு முன்பு பறிகொடுத்தார். 2017-ம் ஆண்டு அவரது வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, வீட்டில்... மேலும் பார்க்க

`மராத்தி கட்டாயம்' - ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தால் மும்பை மக்கள் பாதிப்பு

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் லட்சக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் ஆட்டோ மற்றும் டாக்சியை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இயக்குவதாக ... மேலும் பார்க்க