செய்திகள் :

"காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை.!" - ஸ்டாலின்

post image

திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.

கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.

உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

'சென்னை முழுவதும் குடிநீரில் மலம் கலப்பு' - திமுக கவுன்சிலரின் பகீர் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் பேசுகையில், ''சென்னை முழுவதும் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்த... மேலும் பார்க்க

"என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!"- வன்னிஅரசுக்கு உதயநிதி பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் வன்னிஅரசு, ... மேலும் பார்க்க

திமுக-வில் புதிய மாற்றம்; மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஸ்டாலினின் அறிவிப்பு என்ன?

திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திராவிட ம... மேலும் பார்க்க

"நாங்க பட்டாணி சாப்பிடவா வந்திருக்கோம்? வாங்க ராஜினாமா பண்ணுவோம்"- கொந்தளித்த சென்னை பாஜக கவுன்சிலர்

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 'கூண்டோடு ராஜினாமா செய்வோம்' எனப் பேச பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் அதை ஆதரித்து பேசின... மேலும் பார்க்க

கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன?

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.ம... மேலும் பார்க்க

‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?

தற்போது அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர வரி விதித்துள்ளன. இந்த நிலையில், இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக்கும் விதமாக, ஒன்டாரியோ ஏரியை ‘அமெரி... மேலும் பார்க்க