செய்திகள் :

"என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!"- வன்னிஅரசுக்கு உதயநிதி பதில்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் வன்னிஅரசு, "தேர்தல் களத்தில் திமுகவினர் எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்திருக்கிறேன்.

தேர்தல் நேரத்தில் எனக்கு ஒரு நோய் வந்திருந்தது. என்னால் பேச முடியாமல் இருந்தது.

அன்றைக்கு அமைச்சராக இருந்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் அவர்கள் 'நீ, பேசு' என்றார். என்னால் பேச முடியவில்லை.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு

ஆனால் அந்த அவையில் அண்ணன் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எனக்காக பேசினார். எனது வெற்றியைப் பாராட்டி பேசிய ஒரு தலைவர் என்றால் அது எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் தான்.

நாங்கள் தொடர்ந்து நன்றிகளைச் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எதிர் தரப்பில் (திமுக) இருந்து பேசக்கூடியவர்கள் யாருமே எங்களுடைய எழுச்சி தலைவர் திருமாவளவனுக்கு நன்றி சொன்னதாகத் தெரியவில்லை.

நன்றி என்றால் இருவருக்கும் பொதுவானதுதான். இரண்டு பக்கமும் வாக்குகள் தான் இருக்கின்றன. உழைப்புகள் தான் இருக்கின்றன. ஆனால் இதுவரை அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லவில்லை என்று இந்த அவையில் பதிவு செய்கிறேன்" என்று பேசினார்.

வன்னி அரசின் இந்தப் பேச்சுக்கு எழுந்து பதில் சொன்ன எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தொல். திருமாவளவன் அண்ணனுக்கு நாங்கள் நன்றி சொல்லவில்லை என்று அமைச்சர் சொல்கிறார்.

udhayanidhi stalin
udhayanidhi stalin

ஆனால் நான் அவரிடம் சொல்லிக்கொள்வது எங்களுடைய தலைவருக்கும் அண்ணன் திருமாவளவனுக்கும் இருந்தது தேர்தல் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு ஒரு கூட்டணி என மாறும் கூட்டணி கிடையாது.

அது ஒரு கொள்கை கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று நான் பலமுறை பெருமையாகச் சொல்லியிருக்கிறேன். திருமாவளவனுக்கு நாங்கள் என்றுமே நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

'சென்னை முழுவதும் குடிநீரில் மலம் கலப்பு' - திமுக கவுன்சிலரின் பகீர் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் பேசுகையில், ''சென்னை முழுவதும் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்த... மேலும் பார்க்க

"காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை.!" - ஸ்டாலின்

திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதி... மேலும் பார்க்க

திமுக-வில் புதிய மாற்றம்; மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஸ்டாலினின் அறிவிப்பு என்ன?

திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திராவிட ம... மேலும் பார்க்க

"நாங்க பட்டாணி சாப்பிடவா வந்திருக்கோம்? வாங்க ராஜினாமா பண்ணுவோம்"- கொந்தளித்த சென்னை பாஜக கவுன்சிலர்

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 'கூண்டோடு ராஜினாமா செய்வோம்' எனப் பேச பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் அதை ஆதரித்து பேசின... மேலும் பார்க்க

கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன?

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.ம... மேலும் பார்க்க

‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?

தற்போது அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர வரி விதித்துள்ளன. இந்த நிலையில், இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக்கும் விதமாக, ஒன்டாரியோ ஏரியை ‘அமெரி... மேலும் பார்க்க