செய்திகள் :

அமெரிக்காவில் 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகிறதா? என்ன பிரச்னை? அவர்களுடைய அடுத்தக்கட்டம்?

post image

விரைவில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகின்றன என்கிற தகவல் பரவி வருகிறது.

அமெரிக்காவில் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்காக B1 மற்றும் B2 விசாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த விசா மூலம் வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா சென்றவர்கள் அகதி உரிமை கோரி பலர் அங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர்.

இதனால், இந்த நடைமுறைக்குச் செக் வைக்க B1 மற்றும் B2 விசாக்களை ரத்து செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

டார்கெட் யார்?

2016-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை, B1 அல்லது B2 விசா மூலம் அமெரிக்காவிற்கு வந்து, ஏற்கனவே அகதி உரிமை கோரியவர்கள் அல்லது தற்போது அதற்கு விண்ணப்பித்திருப்பவர்களை இந்த நடவடிக்கை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களைக் கண்டறிய அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த விசா ரத்து குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட், ‘கட்டம் கட்டமாகத்தான் ரத்து செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

என்ன பிரச்னை?

அமெரிக்காவில் வழங்கப்படும் ‘அகதி உரிமை’ என்பது அவரவர் நாட்டில் உண்மையிலேயே அடக்குமுறையையோ அல்லது அதற்கான நியாயமான அச்சத்தையோ எதிர்கொள்பவர்களுக்கானது.

ஆனால், இதைச் சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தி, பலர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுகின்றனர் என்று அமெரிக்க அரசு சொல்கிறது.

ரத்து செய்யப்படும் விசாதாரர்கள் உடனே வெளியேற்றப்படுவார்களா, அல்லது அவர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்படுமா, உண்மையில் அகதியாக இருந்து அவர் அகதி உரிமையின் கீழ் இருந்தால், அவர்களால் ரத்தை மேல்முறையீடு செய்ய முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

`நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ - அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான... மேலும் பார்க்க

சொத்துவரி விவகாரம்: கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர்; சரண்டர் ஆன சென்னை மாநகராட்சி ஆணையர்! -

சென்னையில் சொத்துவரி மறுமதிப்பீடு செய்யப்பட்ட விவகாரத்தை இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேலு எழுப்பினார். அவரின் கேள்விக்கு 'இனி எந்த முடிவையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி... மேலும் பார்க்க

'சென்னை முழுவதும் குடிநீரில் மலம் கலப்பு' - திமுக கவுன்சிலரின் பகீர் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் பேசுகையில், ''சென்னை முழுவதும் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்த... மேலும் பார்க்க

"என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!"- வன்னிஅரசுக்கு உதயநிதி பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் வன்னிஅரசு, ... மேலும் பார்க்க

"காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை.!" - ஸ்டாலின்

திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதி... மேலும் பார்க்க

திமுக-வில் புதிய மாற்றம்; மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஸ்டாலினின் அறிவிப்பு என்ன?

திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திராவிட ம... மேலும் பார்க்க