செய்திகள் :

``'நீங்க பார்க்க வித்தியாசமா இருக்கீங்க' என்றார்"- ரஜினியுடன் செல்ஃபி எடுத்தது குறித்து கயாடு லோஹர்

post image

நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த கயாடு லோஹர், "நான் புகைப்படம் எடுத்த அன்று வேறு இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

கயாடு லோஹர்
கயாடு லோஹர்

இரண்டு ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தது எனக்கு அசௌகரியமாக இருந்தது. அதனால் என் சீட்டை மாற்றினேன்.

அப்போதுதான் ரஜினி சாரைப் பார்த்தேன். விமானம் தரையிறங்கியதும் அஷ்வத்துக்கு ஃபோன் செய்தேன்.

அப்போது அவர் தர்மன் ஷூட்டிங்கில் இருந்தார். அவரிடம் நான், ரஜினிசாரிடம் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள் என்றேன்.

அதற்கு அவர் 'நீங்கள் போய் பேசுங்கள். ஒரு வேளை அவருக்கே உங்களைத் தெரிந்திருக்கலாம்' என்றார்.

பிறகு ரஜினி சார் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று, 'நான் 'டிராகன்' பட நடிகை' என அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

 கயாடு லோஹர்
கயாடு லோஹர்

அவர் 'நீங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறீர்கள்' என்றார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

பிறகு அவரே என்னிடம் ஃபோட்டோ சரியாக வந்திருக்கிறதா? என்று கேட்டார்" எனப் பகிர்ந்திருக்கிறார் கயாடு லோஹர்.

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி: 'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம்... மேலும் பார்க்க

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" - சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் 'The Hollywood Reporter' ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, "மயோடிஸ் நோயால் நான் பாதிக... மேலும் பார்க்க

ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

`சினி'ஸ்கோப் 23ஆரண்யகாண்டம்பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை ... மேலும் பார்க்க

Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Mandadi இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மு... மேலும் பார்க்க

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

RAW ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்... மேலும் பார்க்க

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட... மேலும் பார்க்க