செய்திகள் :

நீட் போராட்டம்: "உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?" - டெல்லி பல்கலைகழகத்திற்கு ராகுல் கண்டனம்

post image

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரகணக்கான மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராடும் மாணவர்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அதாவது, "மாணவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தப்படும் சட்டவிரோதமான கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள், மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இத்தகைய செயல்பாடுகள் மாணவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதோடு, அவர்களின் கல்வி வளர்ச்சியையும் எதிர்கால வேலைவாய்ப்புகளையும் கடுமையாகப் பாதிக்கலாம்.

எனவே, அனைத்து மாணவர்களும் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்து, தங்களின் பாதுகாப்பிற்கும் சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கும் முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும், இந்தச் சூழ்நிலையைத் தவறாகப் பயன்படுத்துவதற்காக அதிகளவில் போலியான மற்றும் தவறான தகவல்கள் உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதால், அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்" என்று தெரிவித்திருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லி பல்கலைக்கழகத்தின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். "ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும் மாணவர்களை மிரட்டுவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?

ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், காலம் வரும்போது இதற்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். உங்களைத்தான் பொறுப்பாக்குவார்கள்" என்று தனது எக்ஸ் தளப்பதிவு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க