செய்திகள் :

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீக்கு மேல் சென்றால் அபராதம்!' - அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

post image

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசியிருந்தார். மிக முக்கியமாக நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் பேசினார்.

Aadhav
Aadhav

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் 88,567 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 1,22,092 பேர் தீவிர காயங்களில் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவிலேயே சாலை விபத்துகளின் மூலமான இறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

மக்களுக்கு பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்து கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. முதல்வருடன் லண்டனுக்கு சென்றிருந்தேன். அப்போது நாங்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து விளையாட்டு போட்டியை காண காரில்தான் சென்றோம். இரண்டரை மணி நேர பயணம் அது. டிரைவர் ஒரு நொடி கூட 70 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லவில்லை. அத்தனை கட்டுப்பாடோடு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டுநர்கள் செயல்படுகின்றனர். குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமாக சென்றால், உடனடியாக AI கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் எதுவும் இல்லாத இடங்களை மட்டும் சர்வே செய்து கண்டடைந்து அந்த பகுதிகளில் மட்டும் 100 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல அனுமதிக்கிறார்கள்.

Aadhav
Aadhav

முதல்வரிடமும் இந்த சிஸ்டத்தை பற்றி கூறினேன். நாமும் நம்முடைய நெடுஞ்சாலைகளை சர்வே செய்து விபத்து அபாயம் இருக்கும் பகுதிகளில் 60-70 கி.மி வேகத்துக்கு மேல் சென்றால் AI கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும், சாலைகளில் குறிப்பிட்ட தூரங்களில் ஓட்டுநர்களும் பயணிகளும் ஓய்வெடுக்க குழந்தைகள் விளையாட சிறிய மால்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். விபத்தில் சிக்குபவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் நிறைய உயிரிழப்புகள் நடக்கின்றன. அவற்றை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே விபத்து சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். இத்திட்டங்களுக்கான வேலையை இப்போதிருந்தே தொடங்க வேண்டும். ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க தயாராக இருக்கிறது. முன்பு ஒப்பந்தத்தாரர்கள் கமிஷனுக்கு பயந்து கொண்டிருந்தனர். ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையே அப்போதைய முதல்வரிடம் இதை கவனத்தில் கொண்டு தீர்க்குமாறு கேட்டது. ஆனால், எதுவும் மாறவில்லை. இப்போது இந்த நான்கு மாதத்தில் எல்லாம் மாறிவிட்டது. 5 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை விடுக்க தமிழகத்துக்காக விடுவிக்க நெடுஞ்சாலைத்துறை தயாராக இருக்கிறது' என்றார்.

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரின் உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த 7-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர்... மேலும் பார்க்க

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" - வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கும், தவெகவினருக்கு... மேலும் பார்க்க

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி - என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, `... மேலும் பார்க்க

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.... மேலும் பார்க்க

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் ரிசல்ட் என்னவோ அனைவரும் எதிர்பார்த்ததுதான்.ரஷ்ய அதிபர் புதினின் ‘ஐ... மேலும் பார்க்க

”நம்ம கட்சி திமுக கூடாரமா மாறிட்டு வருது தலைவரே...” - விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி

தூத்துக்குடி மாவட்ட த.வெ.கவில், புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் மதன் ராஜாவும், மத்திய மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஸ்ரீநாத்தும், தெற்கு மாவட்டச் செயலாளராக பிரைட்டரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நில... மேலும் பார்க்க