செய்திகள் :

நெல்லை: ஆம்னி பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்; போலீஸுடன் வாக்குவாதம்... தவித்த பயணிகள்!

post image

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் விழாக் காலங்களில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், பொதுமக்களிடமிருந்து புகார்களும் எழுந்தவண்ணமிருக்கின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி வழியாக சென்னைக்கு வந்துகொண்டிந்த தனியார் பேருந்து ஒன்று, நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே இருளான பகுதியில் நிறுத்தப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேருந்து நிறுத்தப்பட்டதால் பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர்.

தனியார் பேருந்து ஓட்டுநர் - காவலர்
தனியார் பேருந்து ஓட்டுநர் - காவலர்

ஆனால் ஓட்டுநர் எந்த பதிலும் கூறாமல் இருந்திருக்கிறார். அதனால் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்தப் பகுதியில் இருந்த சிலர் காவல்துறையிடம் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடைத்துக்கு வந்த காவல்துறையினர், ஓட்டுநரிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போது ஓட்டுநர், ``அதிக கட்டணம் வசூலித்தப் புகாரின் பேரில் எங்கள் பேருந்து ஓடக்கூடாது என அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறாராம்.

அதனால் எங்கள் முதலாளி பேருந்தை இயக்கம் வேண்டாம் எனக் கூறிவிட்டார். அதனால் பேருந்தை நிறுத்திவிட்டோம். இனி அமைச்சரிடமோ அல்லது எங்கள் முதலாளியிடமோ நீங்கள் பேசிக்கொள்ளுங்கள்" என்றார். இந்தப் பதிலால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர் விமலன், ஓட்டுநரிடம், ``எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பு முக்கியம். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை இப்போது பயணிகள் பாதுகாப்பாக அவர்களின் இல்லங்களுக்குச் செல்ல வேண்டும். அதுதான் முக்கியம். அதற்குப் பிறகு உங்கள் பிரச்னையை தீர்த்துக்கொள்ளுங்கள். உடனே பஸ் இங்கிருந்து புறப்பட வேண்டும்." என எச்சரித்தார். அதைத் தொடர்ந்து பேருந்து இயக்கப்பட்டது.

தனியார் பேருந்து ஓட்டுநர் - காவலர்
தனியார் பேருந்து ஓட்டுநர் - காவலர்

இதற்கிடையே இன்ஸ்பெக்டரும், ஓட்டுநரும் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கூறுகையில், 'நெல்லையில் சிறப்பு பறக்கும் படை குழுவினர் எந்த சோதனையும் நடத்தவில்லை. ஆனால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆம்னி பஸ்சை நடுரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர் பஸ்சை எடுக்க மறுத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். போக்குவரத்து துறைக்கு அறிக்கை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் விஜய்!

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள்... மேலும் பார்க்க

Omar Abdullah: ஊடகவியலாளரை மணந்த ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - வைரலாகும் புகைப்படங்கள்!

ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஊடகவியலாளர் நிதி ரஸ்தான் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இத்தகவலை அதிகாரப்பூர்... மேலும் பார்க்க

ICU நோயாளிகளுக்கு மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை; கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் இந்த மருத்துவமனையை மட்டு... மேலும் பார்க்க

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு; பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி; எந்தப் பொருள் எவ்வளவு உயர்வு?

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் பால் உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது 230-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

''நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்'' - அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட செய்தி இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடிக்கும் மேல் மோசடி ச... மேலும் பார்க்க

ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புற்றுநோயாளி பினோத் பஸ்வான் என்பவர் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பயணத்த... மேலும் பார்க்க