செய்திகள் :

நெல்லை: "இன்ஸ்டா பழக்கத்தால் இளைஞர்களுடன் திருமணம் மீறிய உறவில் மனைவி" - கொலை செய்த கணவன் கைது

post image

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். நெல்லையில் இயங்கி வரும் தனியார் குக்கர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனோபி. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமூக பிரச்னை தொடர்பாக வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வனோபி இறந்து கிடந்தாராம். அருணாச்சலத்தின் புகாரின் அடிப்படையில் பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்து சென்றனர். வனோபி கழுத்து தெரித்து கொலை செய்யப்பட்டது போலீஸாருக்கு முதல்கட்டமாக தெரிய வந்தது.

பாப்பாக்குடி காவல் நிலையம்

இதனையடுத்து போலீஸார் அருணாச்சலத்திடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தினம் தினம் சண்டை போட்டுக்கொள்வார்கள் என, அக்கம் பக்கத்தினரும் சொல்ல அருணாச்சலத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மனைவி வனோபியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீஸாரின் விசாரணையில், ”நான் என் மனைவி வனோபியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள் செல்போனில் அதிக நேரம் செலவழிப்பார். எனது குழந்தையையும் சரிவர கவனிப்பதில்லை.

இதனால் அவளை கண்டித்து வந்தேன். இதற்கிடையில் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் இன்ஸ்டாவில் சென்னை மற்றும் கடலூரைச் சேர்ந்த 2 இளைஞர்களிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இது எனக்குத் தெரிய வந்ததும் கண்டித்தேன். இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். அந்த இளைஞர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வீடியோவை அவரது செல்போனில் பார்த்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர்கள் பாப்பாக்குடிக்கு வந்து அறை எடுத்து ஒன்றாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் என்னோட உறவினர்களுக்கு தெரிய வந்து என்னை ஏளனமாகப் பேசினார்கள்.

பாப்பாக்குடி காவல் நிலையம்

இதனால் எனக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. கடந்த 7-ம் தேதி பிற்பகலில் மீண்டும் எங்களுக்குள் சண்டை வந்தது. ”அவர்களுடனான பழக்கத்தை கைவிட முடியாது” என மீண்டும் மீண்டும் என் மனைவி சொன்னதால் கோபத்தில் அவளை அடித்ததுடன் பெல்ட்டால் கழுத்தை நெரித்தேன். இதில் அவள் இறந்துவிட்டதால் என் குழந்தையை தூக்கிக் கொண்டு உறவினர் வீட்டில் விட்டுவிட்டு என் மனைவியை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என போலீஸில் சொன்னேன்” எனக் கூறியுள்ளார்.  

எரிந்த நிலையில் பெண்ணின் உடல்; கணவர் வீட்டாரே கொலை செய்தது அம்பலம் - சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையில் சாலையோரமுள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை ... மேலும் பார்க்க

மது விருந்து... அம்மிக்கல் ஆயுதம்; மனைவி உட்பட 7 பேரை சினிமா பாணியில் கொன்று புதைத்த டாக்ஸி டிரைவர்!

பெங்களூருவில் டாக்ஸி டிரைவராக இருப்பவர் இந்து சேகர். இவரது மனைவி சுனிதா. 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

`நாவல்' எழுதி போலீசிடம் சிக்கிய கொலையாளி கிறிஸ்டியன் பாலா: போலந்தின் நிஜ கதை! - குருதிச் சுவடுகள் 1

சினிமாக்களில் கூட கற்பனை செய்யத் தயங்கும் பல வினோதங்களை நிஜ வாழ்க்கை நிகழ்த்திக் காட்டிவிடுகிறது. ஒரு கொலையை நேர்த்தியாக நிகழ்த்திவிட்டு, அதைத் துப்பறியும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ம... மேலும் பார்க்க

குமரி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஜினீயரிங் மாணவர்; போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டத... மேலும் பார்க்க

வேலூர்: 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - இளைஞர் போக்சோவில் சிறையிலடைப்பு

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற 22 வயதான இளைஞன், சாலையில் தனியாகச் சென்ற 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி அழுதபடியே வீட்டுக்கு ஓடிச் சென்று த... மேலும் பார்க்க

கேரளம்: பாலியல் புகாரை மறைக்க ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்; மருத்துவரைத் தாக்கிய நடிகை கைது

கேரள மாநிலம் கொச்சி திருப்பூணித்துறை ஹில்பேலஸ் பகுதியில் வசித்து வருபவர் நடிகை அதுல்யா சந்திரா. மும்பையில் பிறந்து வளர்ந்த அதுல்யா சந்திரா, கொச்சியில் உள்ள பிரபல குற்றவியல் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பண... மேலும் பார்க்க