செய்திகள் :

நெல்லை: "முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் சென்றாரா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி

post image

நெல்லை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்றைய சூழலில் 2 இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 4 இடைத்தேர்தல்கள் வரவுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த 3 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வருகிறது என்றுச் சொன்னால், அதற்கு காரணம் குதிரை பேரம் நடந்துள்ளது என எல்லோரும் கூறுகிறார்கள்.

இந்தக் குதிரைபேரம் எதற்காக என்பது உங்களுக்கே தெரியும். தமிழக முதலமைச்சர் விஜய் தற்போது லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அவர் சொந்த வேலையாகச் சென்றுள்ளாரா அல்லது யாருடன் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அரசு செலவில் அவருடன் யார் யாரெல்லாம் சென்றுள்ளார்கள் என்பதும் தெளிவில்லை. உண்மையிலேயே முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகத்தான் அவர் சென்றுள்ளாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தொழில்துறை அமைச்சர் உடன் அழைத்துச் செல்லப்பட்டாரா?வெறும் 3 நாட்களில் எத்தனை முதலீட்டாளர்களைச் சந்தித்து விட முடியும்?

எத்தனை கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளார்? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. சொந்த வேலையாகச் சென்றிருந்தால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால், தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கத்தான் சென்றுள்ளார் என்றால், தமிழகம் திரும்பியதும் முதலீடுகள் குறித்து விரிவாக விளக்க வேண்டும். அவரது பயணம் தவறில்லை, ஆனால் வெளிப்படைத்தன்மை அவசியம்.  

நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு
நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு

தமிழக சட்​டப்​பேரவை நடவடிக்​கை​களை வேடிக்​கை​யாக​வும் விந்​தை​யாக​வும் பொது​மக்​கள் பார்க்​கின்​ற​னர். சட்டமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். பைபிள் வசனங்கள், உறவினர்களைப் பற்றிப் பேசுவது சட்டமன்றத்திற்கு ஏற்புடையதா என்பதைப் பொதுமக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.

திருச்செந்தூர் அம்பேத்கர் சிலை விவகாரம்; திருமாவளவன் முன்பு இரு தரப்பினர் மோதலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைப்பது தொடர்பாக அக்கட்சியினர் இரு தரப்பாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகி... மேலும் பார்க்க

'நிகழ்ச்சி தொடர்பாக பேசியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்!" - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிய... மேலும் பார்க்க

"முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்" - ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்

கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இரண... மேலும் பார்க்க

"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்..." - கனிமொழி சந்தோஷ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும... மேலும் பார்க்க

Vijay: ``முதல்வர் விஜய் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார்’’ - அமைச்சர் செங்கோட்டையன்

வேலூரில், அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் ஆட்சியில், எல்லாத் துறைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு, சட்டமன்ற உ... மேலும் பார்க்க

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றக் கோரி போராட்டம்; தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.இது தொடர்பாக ... மேலும் பார்க்க