செய்திகள் :

நெல்லை: 'வீட்டில ஒரு ரூபாய் இல்லை; இதுல இத்தன கேமரா!’ - கடுப்பான திருடன் எழுதி வைத்த கடிதம்!

post image

நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகிறார். அவருக்கு துணையாக ஜேம்ஸ் பாலின் மனைவி வசித்து வருகிறார். அதனால் ஜேம்ஸ் பால் அடிக்கடி மதுரைக்கு சென்று மனைவி மற்றும் மகளை சந்தித்து விட்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த 24-ம் தேதி அவர் மதுரைக்குச் சென்றார். அவரது வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருந்ததால் அங்கிருந்தபடியே மொபைல் போனில் வீட்டையும் கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில், 25-ம் தேதி அவர் பார்த்த போது சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை. அதனால் அருகில் இருந்த வீட்டில் உள்ளவருக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி அருகில் வசிப்பவர் ஜெம்ஸ் பால் வீட்டுக்குச் சென்றபோது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதைப் பார்த்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்ததும் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த ஜேம்ஸ் பால், வீட்டுக்குள் சென்றபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறிக் கிடந்தன. அத்துடன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 25,000 ரொக்கப் பணம் காணாமல் போயிருந்தது.

அதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பேட்டை காவல்துறையினர், வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு கிடந்ததுடன், சிசிடிவி பதிவுகள் எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.

திருட்டு நடந்த வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதை அந்த வீட்டில் கைவரிசை காட்டிய திருடனே எழுதியுள்ளார். அதில், 'உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதுக்கு இத்தனை சிசிடிவி கேமரா. அடுத்த தடவை என்னை மாதிரி திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசு வை. மன்னித்துக் கொள்ளவும் - திருடன்' என எழுதப்பட்டிருந்தது.

அதனையும் கைப்பற்றிய போலீஸார், அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து, அந்த நூதனத் திருடனைத் தேடி வருகின்றனர். இந்த திருட்டுச் சம்பவத்தால் பேட்டை பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க