செய்திகள் :

"'பகவந்த் கேசரி' பார்த்துட்டு விஜய் சார் என்கிட்ட பேசிய விஷயம்..." - 'பகவந்த் கேசரி' இயக்குநர்!

post image

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்தான்.

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

ஆனால், இந்த ரீமேக்கில் சில புதிய விஷயங்களையும் ஹெச்.வினோத் சேர்த்திருக்கிறார். இப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், இத்தகவலைப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் 'பகவந்த் கேசரி' இயக்குநர் அனில் ரவிபுடி.

அவர், "ஹைதராபாத்தில் வெங்கட் பிரபு சாரின் 'GOAT' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போதொரு நாள் திடீரென ஜெகதீஷ் சாரின் குழுவிலிருந்து என்னை அழைத்தார்கள்.

'நீங்கள் ஒருமுறை விஜய் சாரைப் பார்க்க வேண்டும்' என்று சொன்னார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம்! 'திடீரென என்ன விஷயம்?' என்று யோசித்தபடியே, கையில் இருந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக அவரைப் பார்க்க ஓடினேன்.

Anil Ravipudi - Jana Nayagan
Anil Ravipudi - Jana Nayagan

அவரது வேனிட்டி வேனுக்குள் சென்று சுமார் 15 நிமிடங்கள் அவருடன் அமர்ந்து பேசினேன். அவர் என்னை எதற்காகக் கூப்பிட்டார் என்றால்... 'நான் பகவந்த் கேசரி திரைப்படத்தைப் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறீர்கள்!

குறிப்பாகச் சில காட்சிகளும் தருணங்களும் இன்னும் என்னை விட்டு விலகாமல் மனதிலேயே நிற்கின்றன. அதற்காக உங்களைப் பாராட்டத்தான் கூப்பிட்டேன்' என்றார். அதைக் கேட்டதும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி!

அங்கிருந்து கிளம்பிய உடனே மகேஷ் பாபு சாருக்குத் தொடர்புகொண்டு, 'சார், இப்போதுதான் விஜய் சாரைச் சந்தித்தேன். என் படத்தைப் பார்த்துவிட்டு ரொம்பவே பாராட்டிப் பேசினார்' என்று அந்த மகிழ்ச்சியை அவரிடமும் பகிர்ந்துகொண்டேன்" என்றார்.

'ஆங்கிலம் தெரியாமல் இருந்தபோது என்னை கேலி செய்தனர்; ஆனால்..!'- கசப்பான சம்பவத்தை பகிர்ந்த பாக்யஸ்ரீ

நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் 'காந்தா' படத்தின் மூலம் அனைவர... மேலும் பார்க்க

Allu Arjun: 'மீண்டும் டைரக்ஷன்'- அல்லு அர்ஜூன் படத்தை இயக்குகிறாரா பேசில் ஜோசப்?

நடிகர் பேசில் ஜோசப் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான வேலையில் பரபரப்பாக இருந்துவருகிறார். கடந்த மே மாதம் இவர் நடித்திருந்த 'அதிரடி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ... மேலும் பார்க்க

Bhagyasri : "அன்று என் அப்பா வேலைக்காக கெஞ்சியதை பார்த்திருக்கிறேன்!" - உருகும் பாக்யஸ்ரீ போர்ஸ்

டோலிவுட் நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் புரோமோஷனில் பாக்யஸ்ரீ ... மேலும் பார்க்க

Jr NTR: அரசியலுக்கு வருகிறாரா ஜூனியர் என்.டி.ஆர்!? - என்ன சொல்கிறது அவரின் குழு?

டோலிவுட் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசியலோடு நீண்ட காலத் தொடர்பு உண்டு. அதனால் தான், அவரைப் பற்றி வெளியாகும் சிறு அரசியல் செய்திகூட பெரும் வைரலாகப் பேசப்படுகிறது. சமீபத்தில், ... மேலும் பார்க்க

Samantha: `கிளாமருக்கு மட்டும்தான் ஹீரோயினா?; சாதித்த `மா இன்டி பங்காரம்' - சமந்தா நெகிழ்ச்சி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது... மேலும் பார்க்க

Jaya Janaki Nayaka: தியேட்டரில் தோல்வி, யூடியூபில் சாதனை! 100 கோடி views கடந்த முதல் இந்தியப் படம்!

திரையுலகைப் பொறுத்தவரை ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது அதன் திரையரங்க வசூலை வைத்தே பெரும்பாலும் கணிக்கப்படுகிறது. ஆனால், காலமாற்றத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப வெற்றிக்கான இலக்கணங்களும்... மேலும் பார்க்க