செய்திகள் :

பகுவா பாடல்கள் படி மாணவர்களுடன் ஹோலி கொண்டாடிய ஆளுநர் ரவி | Video

post image

பாடல்கள் படி ஆளுநர் ஆர். என் ரவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்.

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைவர்கள் பலரும் மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநர் ஆர். என் ரவி அவர்கள், சென்னை ஐஐடி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து, பகுவா பாடி, ஹோலி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்.

ஹோலி கொண்டாடிய ஆளுநர்
ஹோலி கொண்டாடிய ஆளுநர்

மேலும் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், " எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு புனிதமான ஹோலி பண்டிகையை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஹோலியின் துடிப்பான வண்ணங்கள் பாரதத்தின் நீடித்த உணர்வுகளான தீமையை நன்மை வென்றதையும் நல்லிணக்கத்தின் கொண்டாட்டத்தையும் நம்மை ஒரே குடும்பமாக இணைக்கும் ஆழமான ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றன.

இந்த புனிதமான பண்டிகை நமது கூட்டு உணர்வை மீண்டும் தூண்டி, நமது நாகரிகத்தை வடிவமைத்த காலத்தால் அழியாத மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஹோலி வளம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும்.

ஹோலி கொண்டாடிய ஆளுநர்
ஹோலி கொண்டாடிய ஆளுநர்

2047 ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப அசைக்க முடியாத உறுதியுடன் நம்மை வழிநடத்தட்டும்" என்று ஹோலி வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என் ரவி ஐஐடி மாணவர்களுடன் பகுவா பாடல் பாடி பண்டிகையை கொண்டாடிய வீடியோவை கவர்னர் மாளிகை வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மும்பை: வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரானில் ... மேலும் பார்க்க

Harish Kalyan: `மகள் பிறந்திருக்கிறாள்' - தந்தையான நெகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்!

தமிழ் சினிமாவுக்கு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதைத் தொடர்ந்து, அவர் நடித்த பியார் பிரேமா காதல், பார்க்கிங், லப்பர் பந்து, டீசல் போன்றப் படங்கள் மூலம் தமிழ் ச... மேலும் பார்க்க

`பிழைப்பு தேடிவந்தோம்; பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம்' - வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள்

ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் வளைகுடா நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து வரும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தனியாளாக நின்று தொடர்ந்து தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

Iran: "மகளே, வீட்டிற்குள்ளேயே இரு" - நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஈரானில் சிக்கித் தவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேல், அபுதாபி, துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள... மேலும் பார்க்க

US-Israel Attacks Iran: "ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது" - என்ன சொல்கிறது அமெரிக்கா?

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தியது.அதேசமயம் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. ஆனால் இப்பேச்சுவார்த... மேலும் பார்க்க