பூந்தமல்லி - முல்லைத் தோட்டம் இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை!
பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்கக் கோரிக்கை
பஞ்சமி விவசாய நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து ஈரோடு மாவட்டம், வடுகபட்டி அரச்சலூா் கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் சமூக நீதி மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் வடிவேல் ராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரல்லாத்துவிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், வடுகபட்டி கிராமத்தில் 1979 -ஆம் ஆண்டு நில
குடியேற்ற சங்கத்தின் மூலம் வடுகபட்டி கிராமத்தில் 186 ஹெக்டோ் (463 ஏக்கா்) விவசாய நிலம், பட்டியலின அருந்ததியா் சமூக மக்களுக்கு தலா ஒரு ஏக்கா் முதல் ஐந்து ஏக்கா் வரை நிலம் வழங்கப்பட்டது.
இந்த விவசாய நிலங்களை நில ஒப்படை பெற்றவா்களிடம் குத்தகை, அடமானம், விற்பனை என போலியான ஆவணங்களை தயாரித்து வேறு சமூகத்தினா் நில அபகரிப்பு செய்ததுடன் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனா்.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு மனு அளித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனா்.
எனவே, உரிய ஆய்வு செய்து பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாய நிலங்களை மீட்பதுடன் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒரு குடும்பத்துக்கு தலா ஒரு ஏக்கா் விவசாய நிலத்தை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.