செய்திகள் :

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

post image

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இது பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது.

'நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்' என்று காங்கிரஸ் கண்டனக் குரல் எழுப்பியது.

'நிதிஷ் குமார் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறதா?' என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது.

பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று
பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று

சமீபத்திய சர்ச்சை

இந்த நிலையில், நிதிஷ் குமார் ஹிஜாப் பிடித்து இழுத்த பெண் பணியில் இன்னும் சேரவில்லை.

அந்தப் பெண் சபல்பூர் சமூக சுகாதார மையத்தில் சேர நேற்றுதான் கடைசி தேதி. அவர் நேற்று மாலை 6 மணிக்குள் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் பணியில் சேரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சுகாதாரத் துறை இந்தக் கடைசி தேதியை நீட்டிக்கலாம். அப்படி செய்தால், அதற்கான வழிகாட்டுதல் பின்னர் அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளது.

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்ட... மேலும் பார்க்க

'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

விசா விலை உயர்வு, சமூக வலைதள சோதனை என ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை தந்து வருகிறது ட்ரம்ப் அரசு.இந்தச் சூழலில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்... மேலும் பார்க்க

"கலைஞர் காலத்தில் கூட்டணியில் இருந்தபோதும் கட்டுப்படாமல் இயங்கியிருக்கிறேன்" - திருமாவளவன் பேச்சு

மதுரையில் எவிடென்ஸ் கதிர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றும்போது, "வலதுசாரி அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருவது கவலை அளிக்கிறது. தே... மேலும் பார்க்க

"காங்கிரஸுக்கு காவடி எடுத்தாலும் விஜய் முதல்வராக முடியாது; பாஜக கூட்டணிக்கு வாங்க" - தமிழருவி மணியன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழருவி மணியன் பேசுகையில், "காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால... மேலும் பார்க்க