செய்திகள் :

Sreenivasan: "சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களை..." - ஶ்ரீனிவாசன் குறித்து சூர்யா

post image

உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் நேற்று காலை காலமானார்.

திடீரென நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது.

Sreenivasan
Sreenivasan

நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர் எனப் பல்வேறு அவதாரங்களில் ஜொலித்தவர் ஸ்ரீனிவாசன்.

அவருடைய மறைவுக்கு மலையாளத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சூர்யாவும் நேரில் சென்று ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர், "நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

Suriya
Suriya

சூர்யா தற்போது வெங்கி அத்லூரி இயக்கத்தில் 'சூர்யா 46' படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தன்னுடைய 47-வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

"சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் " - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ்

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்திருக்கும் 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. 1960-களில் நடந்த மொழிப்போர் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்த 'பராசக்தி'... மேலும் பார்க்க

``நடிகர் ஶ்ரீனிவாசன் என் வகுப்புத் தோழர்; நல்ல மனிதர்" - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார்.கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனி... மேலும் பார்க்க

"என்னை கைது செய்ய உத்தரவா?" - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்

முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான லிங்குசாமி தனது தம்பி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2016 ஆம் ஆண்டு லிங்குசாமியும், அவரது தம்பியும் தங்களது... மேலும் பார்க்க

Krithi shetty: `தேவதை வம்சம் நீயோ.!’ - நடிகை கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் க்ளிக்ஸ் |Photo Album

Krithi Shetty Exclusive: கார்த்தி படத்தில் ஜோடி... பிரதீப் ரங்கநாதன் ஐடியா... சீமான் கேட்ட கேள்வி! மேலும் பார்க்க

What To Watch: கொம்புசீவி முதல் அவதார் வரை! இந்த வாரம் என்ன படங்கள் பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான்.தியேட்டர் வெளியீடுகள்:கொம்புசீவி (தமிழ்):சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பொன்ர... மேலும் பார்க்க