செய்திகள் :

"பதவி ஆசையால் கூட்டணியைவிட்டு வெளியே வந்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்" - திருமா காட்டம்

post image

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"மின்வெட்டு இருக்கிறது என்பது உண்மைதான். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி இதனைச் சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் சொல்லும் தகவல்களை வைத்துதான் அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

அதிகாரிகள் சரியானத் தகவல்களை அமைச்சர்களுக்கு வழங்க வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் தேர்தல் நேரங்களில் குறிப்பாக இடைத்தேர்தல் நேரங்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள் என்பதும் அண்மை காலமாக அதிகரித்திருக்கிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. ஆகவே இந்த இடைத்தேர்தலில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

திமுகவுடன் நாங்கள் நீண்ட நாட்கள் பயணித்திருக்கிறோம். எப்படி அவர்களுடன் பயணித்தோம் என்பது முன்னணித் தலைவர்கள் மற்றும் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும் தெரியும். ஆனால் திமுகவிற்கு ஆதரவாகப் பேசுகிறோம் என்ற பெயரில் சிலர் எங்கள் மீது தேவையில்லாத அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

திருமாவளவன், ஸ்டாலின்
திருமாவளவன், ஸ்டாலின்

துரோகப் பட்டத்தைச் சுமத்துகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து பதவிக்காக நாங்கள் விலகினோம் என்பது போன்ற தவறான தகவலைப் பரப்புவது சரியானது கிடையாது. இது எங்கள் தலைமைத்துவத்தின் மீது நடத்தும் தாக்குதலாகப் பார்க்கிறேன். பதவி ஆசை பிடித்து அந்தக் கூட்டணியைவிட்டு வெளியே வந்தாக ஒரு தோற்றதை உருவாக்குகிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

``காசு வாங்கிக்கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்" - விஜய் சேதுபதியைச் சாடும் கனிமொழி சந்தோஷ்

பிக்பாஸ் 10-வது சீசனின் தொகுப்பாளராக இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த வார நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த நிகழ்வுகளை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். ஆனால், அது ஆ... மேலும் பார்க்க

புதிய தலைமை செயலகம்: `ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை..!'- கொதிக்கும் மீனவர்கள்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

``கூட்டணி குறித்து கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார்..?" - எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ``ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்... மேலும் பார்க்க

தவெக கூட்டணி: "ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கவில்லை எனில்..." - செல்வப்பெருந்தகை

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க

'அமைச்சரவையின் முதல் விக்கெட்... பதைபதைப்பில் 'கில்லி' சரத்? - அதிரடிக்கு தயாராகும் முதல்வர்?

கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை நுணுக்கியது தொடங்கி தாம்பரம் மாநகராட்சி டெண்டர் ஊழல் வரைக்கும் தொடர் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கில்லி சரத். 'அமைச்சர் போதைப் பொருள் பயன்படுத்தினார... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: பள்ளியில் கழிவறை இருந்தும் காவிரி படுகையை நாடும் மாணவர்கள்; அவலநிலைக்கு காரணம் இதுதான்!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நூறு ஆண்டுகளைக் கடந்த இந்தப் பள்ளியில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளில்... மேலும் பார்க்க