செய்திகள் :

பத்தா: ``சிறுவன் சாய் பிரிதிவ்ராஜ் தேசிய விருதுக்கு தகுதியானவன்" - இயக்குநர் ஷங்கர் பாராட்டு

post image

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ’சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இயக்குநர் அட்லீ தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இவர்களைக் கடந்து குழந்தை நட்சத்திரமான சாய் பிருத்விராஜ் நடிப்பும் பெருமளவில் பேசப்படுகிறது. குறிப்பாக பயத்தைக் காட்டுவதாக இருக்கட்டும், தவறைச் செய்துவிட்டு அது சரியாகுமா எனப் பதற்றப்படுவதாக இருக்கட்டும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஒரு மரத்தடியில் விஜய் சேதுபதியும் அச்சிறுவனும் பேசிக்கொள்ளும் காட்சி கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சாய் பிரிதிவ்ராஜ்
சாய் பிரிதிவ்ராஜ்

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் பத்தா திரைப்படம் குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், ``பாத்தா – நல்ல கதை, மனிதநேயம், மிகச்சிறந்த நகைச்சுவை மற்றும் படம் முழுவதும் கைதட்டல்களைப் பெறும் தருணங்கள் நிறைந்த ஓர் அழகான திரைப்படம். மிகவும் சிறப்பான நடிகர்களின் தேர்வு மற்றும் அவர்களின் நடிப்பு. படத்தின் ஒவ்வொரு க்ளோஸ்-அப் காட்சியிலும் அனைவரின் முகபாவனைகளும் மிகவும் அற்புதம். விஜய் சேதுபதியின் ஆத்மார்த்தமான மற்றும் உயர்தரமான நடிப்பு வெளிப்பட்டுள்ளது. சிறுவன் சாய் பிரிதிவ்ராஜ் தேசிய விருது பெற தகுதியானவன்.

லிஜோமோல் ஜோஸ் மிகவும் இயற்கையாகவும் நேர்த்தியாகவும் நடித்துள்ளார். சாய் அபயங்கரின் பின்னணி இசை புத்துணர்ச்சியாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது; அது பல காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. அமைதியும் உணர்ச்சியும் நிறைந்த பல தொட்டுச் செல்லும் தருணங்கள் படத்தில் நிறைந்துள்ளன. இத்தகைய தரமான பிளாக்பாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் அட்லீ, பிரியா அட்லீ, முராத் கேதானி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோருக்கு வாழ்த்துகள். இயக்குநர் பாலாஜி தரணிதரனிடமிருந்து மேலும் ஒரு மறக்க முடியாத திரைப்படம். இது பாலாஜியின் “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்”." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: அழகான கதைதான், ஆனால் தத்துவார்த்த போதனைகள் படத்துக்கு உதவுகின்றனவா?

தீபாவளி இரவில் ஆள் இல்லாத, ரயில் பெட்டியில், எட்டாயிரம் ஆண்டுகளாகத் தன் காதலைத் தேடும் நிவின் பாலியும், தன் குடும்பத்தைப் பிரிந்து எட்டு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் சூரியும்... மேலும் பார்க்க

"டோரதி, பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்"- பாராட்டிய சூர்யா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

ஏழு கடல் ஏழு மலை: ``ஐந்து ஆறு முறை பார்த்துவிட்டேன்; ஆனாலும்.."- இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

‘கற்றது தமிழ்’, ’தங்கமீன்கள்’, ’பேரன்பு’, ’பறந்து போ’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்... மேலும் பார்க்க

"ஒரே சூரியன், ஒரே சந்திரன் மாதிரி ஒரே தலைவன் என்றால் அது என்னோட அப்பா மட்டும்தான்"- சௌந்தர்யா

'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘லவ்’. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின... மேலும் பார்க்க

Dorothy: "என்னை விமானத்தில் ஏற்ற மறுத்தபோது அதிர்ச்சியாக இருந்தது" - ஜீவா சுப்ரமணியம் பேட்டி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி' படத்திற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப... மேலும் பார்க்க

Amala Paul: ``ஆடை படம்போல இன்னொரு படம் நடிக்க மாட்டேன்" - நடிகை அமலா பால் ஓபன் டாக்!

2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடை'. இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பார். வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரத்னா குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத... மேலும் பார்க்க