செய்திகள் :

பரிகார ரூமில் பள்ளி சீருடை, லேப்டாப் முழுக்க ஆபாச வீடியோக்கள்; சேலம் சாமியாரின் அதிர்ச்சிப் பின்னணி

post image

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த 50 வயதான விஜயராஜா ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்திருக்கிறான்.‌‌ மேலும், சனீஸ்வரா பரிகார நிலையம் என்கிற பெயரில் போலியாக மாந்திரீக மையம் ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறான்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறுமி ஒருவர் விநாயகர் வழிபாட்டிற்கான நன்கொடை கேட்டு மாந்திரீக நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். அந்தச் சிறுமியிடம் தகாத முறையில் விஜயராஜா நடக்க முயற்சி செய்திருக்கிறான். பதறிய அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய சக தோழியான மற்றொரு சிறுமியிடம்‌ கூறியிருக்கிறார். தன்னிடமும் அந்தச் சாமியார் இதேபோன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்ததாக அந்தச் சிறுமியும் கூறியிருக்கிறார். இதுகுறித்து சிறுமிகள் இருவரும் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விஜயராஜாவின் மாந்திரீக பரிகார நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

போலி சாமியார் விஜயராஜா
போலி சாமியார் விஜயராஜா

பூட்டப்பட்டிருந்த நிலையில், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். பள்ளி மாணவிகளின்‌ சீருடைகள் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். மேலும், அங்கிருந்த ஒரு லேப்டாப்பை எடுத்து பார்த்தபோது, சாமியார் விஜயராஜா ஏராளமான பள்ளி சிறுமிகள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாக இருக்கும் 50- ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, பதுங்கியிருந்த விஜயராஜாவைச் சுற்றி வளைத்துப் பிடித்து‌ கைது செய்துள்ளனர். பரிகாரம் என்கிற பெயரில் சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு 50- ற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் எடுத்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலி சாமியார் விஜய் ராஜாவிடம் மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை: கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட இருவர்; 5 பேர் அதிரடி கைது!

சிவகங்கை அருகே செப்டம்பர் 16 அன்று 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 5 நபர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.கொலை பின்னணிசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கு... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு; கடித்துக் குதறி எஜமானர் குடும்பத்தைக் காப்பாற்றிய வளர்ப்புப் பூனை

வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை, காதல் பறவைகள், புறாக்கள், அணில்கள், அலங்கார வண்ணமீன்கள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்கள். இவற்றில் குறிப்பாக நாய்கள் வீட்டுக் காவலுக்கும், பூனைகள் எலிகளைக் க... மேலும் பார்க்க

கடலூர்: `எது பெரியது?’ - விநாயகர் சிலை கரைப்பதில் மோதல்; விலக்கிவிடச் சென்றவர் உயிரிழந்ததால் பதற்றம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகரம் மற்றும் கிராமப் பகுதிகள் என, பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. அதற்கு நிகராக அந்தச் சிலைகளால் சட்டம்... மேலும் பார்க்க

கர்நாடகா: அரசு மருத்துவராக ஊதியம் பெற்றுக்கொண்டே PG படித்த பெண்; காங்கிரஸ் MLA உறவினருக்கு நோட்டீஸ்

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள வாம்பே காலனியில் இயங்கி வருகிறது கர்நாடக அரசின் 'நம்ம கிளினிக்' மருத்துவமனை. இந்தக் கிளினிக்கில் மருத்துவராக அங்கிதா யாராகல் என்ற பெண் பணியாற்றியிருக்கிறார். இவர் ... மேலும் பார்க்க

திருச்சி: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் சோதனை!

தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது, கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக புக... மேலும் பார்க்க

`நான் பாட்டியைக் கொன்னுட்டேன்' - குடிபோதையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் கூச்சலிட்ட பேரன் கைது

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் வெட்டுதுறை புதுவல் பகுதியைச் சேர்ந்தவர் மெர்சி (65). இவர் கடினங்குளம் சான்னாங்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மகள் பிந்து மற்றும் பிந்துவின் க... மேலும் பார்க்க