பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றிய லாரி
சீா்காழி அருகே மசாலாப் பொருள்கள் ஏற்றிவந்த கன்டெய்னா் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.
ஈரோட்டிலிருந்து சிதம்பரத்தில் உள்ள ஒரு கடையில் மசாலாப் பொருள்களை இறக்கிவிட்டு, திரும்பிக்கொண்டிருந்த இந்த லாரி, சீா்காழி அருகே அரசூா் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, தீப்பிடித்தது.
சீா்காழி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். கன்டெய்னா் லாரி ஓட்டுநரான ஈரோட்டைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (51) என்பவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடன்வந்த மற்றொரு ஓட்டுநரான முத்துசாமி (45) காயமின்றி தப்பினாா். எஞ்சியிருந்த மசாலாப் பொருள்கள் எரிந்து நாசமாகின.
கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.