IND vs SA: 'எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை; கம்பேக் கொடுப்போம்'- கேப்டன் சூர...
IND vs SA: 'எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை; கம்பேக் கொடுப்போம்'- கேப்டன் சூர்யகுமார் உறுதி
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
அணியின் தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், " நாங்கள் முதலில் சிறப்பாகத்தான் பந்து வீசியிருந்தோம். அவர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள்.
எங்களின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். பவர்ப்ளேயில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

அர்ஶ்தீப் மற்றும் பும்ரா இருவரும் இணைந்து நன்றாகத்தான் பந்து வீசியிருக்கின்றனர்.
அடுத்தப் போட்டியில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை.
எங்களின் ஸ்டைலில் அப்படியேத்தான் ஆடப் போகிறோம். அடுத்தப் போட்டியில் நிச்சயமாக கம்பேக் கொடுப்போம் என நம்புகிறோம்" என்று கூறியிருக்கிறார்.



















