செய்திகள் :

பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? - செங்கோட்டையன் பேசியது என்ன?

post image

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

அப்போது அவர் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டை குறித்து பேசியதாவது...

"பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் சாதிச் சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஜய் செங்கோட்டையன்
விஜய் செங்கோட்டையன்

முதல்வரின் உத்தரவின்படி, முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த அட்டையில் மாணவரின் முகவரி, சாதிச் சான்றிதழ் விவரங்கள், இரத்த வகை, ஆதார் எண், தொலைபேசி எண்

ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.

இதன் மூலம் மாணவர்கள் சான்றிதழ்களுக்காக அலைவது தவிர்க்கப்படும்".

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி பெயர்‌ என்கிற அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையையும், எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

வெங்கட நாராயணா நியமனம்: 'மேகதாது அணைக்கு எதிராகப் போராடுகையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே.!' - சீமான்

ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா . இவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது தவெக அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்... மேலும் பார்க்க

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' - டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா வை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள... மேலும் பார்க்க

'பிரியா விடை நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக.!' - டெல்லி பிரதிநிதிக்கு தினகரன் எதிர்ப்பு

'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளது பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.அம்மா மக்கள் முன்னேற்ற கழக... மேலும் பார்க்க

உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் அதிர்ச்சி: 14 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சியில் சேர திட்டம்?

2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக 2022ம் ஆண்டு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா இரண்டாக உடைந்தது... மேலும் பார்க்க