பழுதான வாகனங்களுக்குப் புதிய வாகனம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
மாற்றுத்திறனாளிகளின் மின்கலனால் இயங்கும் ஸ்கூட்டா், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் பழுதடைந்திருப்பின் அதற்குப் பதில் புதிய வாகனம் பெற்றிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன் பெற்று பழுதான வாகனங்களுக்கு மட்டுமே புதிய வாகனம் வாங்கலாம்.
தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஏற்கெனவே பெற்ற வாகனத்தின் பதிவு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், புகைப்படம்- 2 ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சி-620001 (தொலைபேசி- 0431-2412590) என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ வரும் நவ.11-க்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.