செய்திகள் :

பழைய கதைகள்... புதிய குரல்! ஏன் கார்சனுக்கு (Anne Carson) 2026 இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு!

post image

2026-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான ஆன் கார்சனுக்கு (Anne Carson) வழங்கப்பட்டுள்ளது. பழைய கிரீக் இலக்கியங்களையும் தொன்மங்களையும் அப்படியே மீண்டும் சொல்வதற்குப் பதிலாக, அவற்றை நவீன மனிதர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளுடன் இணைத்து புதுவடிவில் படைத்த அவரது எழுத்துக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

யார் இந்த ஏன் கார்சன்?

76 வயதான ஏன் கார்சன், கவிஞர் மட்டுமல்லாமல் கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் செவ்வியல் இலக்கிய அறிஞராகவும் அறியப்படுகிறார். பண்டைய கிரீக் இலக்கியத்தில் அவருக்குள் ஆழமான அறிவு, அவரது படைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கவிதை, உரைநடை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என வெவ்வேறு இலக்கிய வடிவங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பது அவரது தனித்துவமான பாணியாக உள்ளது.

Anne Carson

பழைய கதைகள்... புதிய வடிவம்!

பண்டைய கிரீக், ரோமன் இலக்கியங்களின் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை நவீன காலத்துக்குக் கொண்டு வருவது, கார்சனின் எழுத்தின் முக்கிய அம்சம். அதில் முக்கியமானது ஆட்டோபயோகிராபி ஆஃப் ரெட் (Autobiography of Red - 1998). இது கிரீக் கவிஞர் ஸ்டீசிச்சோரஸின் துண்டுகளாகக் கிடைத்த பழைய கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கவிதை நாவல் (verse novel). ஜெரியான் என்ற சிவப்பு நிற இறக்கைகள் கொண்ட கதாபாத்திரத்தின் வழியாக காதல், அடையாளம், தனிமை போன்ற நவீன உணர்வுகளை ஏன் கார்சன் எழுதியுள்ளார்.

அவரது ஈரோஸ் தி பிட்டர்ஸ்வீட் (Eros the Bittersweet - 1986), பண்டைய கிரீக் இலக்கியத்தில் காதல் மற்றும் விருப்பத்தின் இயல்பை ஆராயும் படைப்பு. தி பியூட்டி ஆஃப் தி ஹஸ்பண்ட் (The Beauty of the Husband - 2001), திருமண உறவு மற்றும் அதன் முறிவை 29 பகுதிகளாக அமைந்த கவிதை வடிவில் பேசுகிறது. இப்படி ஒரு படைப்பை கவிதையா, கட்டுரையா, புனைகதையா என்று ஒரே வகைக்குள் அடக்க முடியாத அளவுக்கு ஏன் கார்சன் இலக்கிய வடிவங்களுடன் பரிசோதனை செய்துள்ளார்.

ஏற்கெனவே பல அங்கீகாரங்கள்!

ஏன் கார்சனின் இலக்கியப் பயணம் நோபலுக்கு முன்பே பல முக்கிய விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2000-ல் மெக்டாக்கர் பெல்லோஷிப் பெற்ற அவர், 2001-ல் டி.எஸ். எலியட் பரிசு வென்ற முதல் பெண் கவிஞரானார். கிரிப்பின் கவிதைப் பரிசு உள்ளிட்ட பல முக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

2026-ஆம் ஆண்டின் இலக்கிய நோபல் மூலம் 1901 முதல் வழங்கப்பட்டு வரும் இந்தப் பிரிவின் 123-வது வெற்றியாளராக ஆன் கார்சன் இடம்பெறுகிறார். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகை 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர்; இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல்.

செவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடல் மூலம் சமகால இலக்கியத்துக்குப் புதிய வடிவங்களை உருவாக்கிய துணிச்சலான, புதுமையான படைப்புகள் என்பதே ஏன் கார்சனுக்கு நோபல் வழங்கப்பட்டதற்கான ஸ்வீடிஷ் அகாடமியின் காரணம். பழைய இலக்கியத்தை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட வரலாறாகப் பார்க்காமல், இன்றைய மனிதர்களின் உணர்வுகளோடு உரையாட வைப்பதே ஏன் கார்சனின் தனித்துவம்.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

“மாதவிடாய் நிற்கும் முன்பருவமும் நானும்!” - பெண்களின் உடல், மனம் குறித்த ஓர் ஆத்மார்த்தப் பதிவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அற்புதக் கலைஞர் சிவாஜிக்கு அரசுகள் தகுந்த அங்கீகாரம் அளித்ததா? – ஒரு ரசிகரின் மனக்குமுறல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

50 வயதில் விமானி... மருத்துவத்தில் புதிய புரட்சி! – தடைகளை உடைத்த பெண் மருத்துவர் வர்ஜீனியா அப்கர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஈகோ அரசியலும், இந்திய ஜனநாயகமும்! - வாசகர் வாய்ஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கண்ணதாசன் ஒரு தமிழ்ப் பித்தன் - எளிய மக்களின் இதயத்தில் தமிழை வாழ வைத்த கவிஞன்