செய்திகள் :

பாகுபலி, ராபின் ஹூட் போல செயல்படாதீர்கள் - பீகார் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை

post image

பீகாரில் உள்ள செசன்ஸ் கோர்ட் நீதிபதி அனில் குமார், ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறை அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டார். ஆனால், அந்தக் காவல்துறை அதிகாரி அதைச் செய்யவில்லை. இதையடுத்து அதை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான குற்றமாகக் கருதி, அந்த அதிகாரியை கோர்ட்டிற்கு வரவைத்த செசன்ஸ் கோர்ட் நீதிபதி, அவருக்கு தண்டனை வழங்கி அபராதமும் விதித்தார். அபராதம் விதித்ததைத் தவிர, அந்த அதிகாரியை நீதிபதி தண்டித்தார். இதை எதிர்த்து அந்தக் காவல்துறை அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் செசன்ஸ் கோர்ட் கையாண்ட நடைமுறைகளை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட், அந்த நீதிமன்ற நீதிபதி தனது சட்ட வரம்பிற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டாரா என்று கேள்வி எழுப்பியது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரைத் தனது நீதிமன்றத்திற்கு வரவழைக்கவும், அவர்கள் நேரில் ஆஜராகத் தவறியதை நீதிமன்றத்தின் முன்பு இழைக்கப்பட்ட குற்றம் எனக் கருதி, அதே நாளில் அந்த உயர் அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

நீதிபதி "ராபின் ஹூட்" அல்லது "பாகுபலி" போல் செயல்படக் கூடாது என்று எச்சரித்த நீதிபதிகள், ஒரு நீதிபதி தனது அதிகார வரம்புகளை அறிந்திருக்க வேண்டும் என்று அவருக்கு நினைவூட்டினர். மேலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தவறியதற்காக காவல்துறைக் கண்காணிப்பாளரை (எஸ்பி) தண்டித்த நீதிபதியின் செயல் வருந்தத்தக்கது என்று தெரிவித்தனர்.

நீதிபதி சூர்ய காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி விசாரணையின் போது தெரிவித்த கருத்தில், ``சாகசம் செய்தது போதும். தேசிய நீதித்துறை அகாடமிக்குச் சென்று பயிற்சி பெறுங்கள். நீங்கள் ராபின் ஹூட் ஆக வேண்டியதில்லை. நீங்கள் ஒரு பாகுபலி ஆக விரும்புகிறீர்களா? நீதிபதியாக உங்கள் வரம்புகளையும் அதிகார வரம்புகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தைப் பற்றிய உங்கள் புரிதல் உண்மையிலேயே, ஆழ்ந்த ஏமாற்றமளிக்கிறது'' என்று தெரிவித்தனர்.

அவதூறு வழக்கு; `யூடியூபர் துருவ் ராட்டிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட்'- நீதிமன்றம் உத்தரவு

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, விகாஷ் பாண்டே என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டி யூடியூபர் துருவ் ராட்டி 2018ம் ஆண்டு காணொளி வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக விகா... மேலும் பார்க்க

திருமணத் தகவல் மையத்தில் அலைமோதிய ஆண்கள்; கோழிக்கோடு சிவன் கோயிலில் பெறப்பட்ட 12,000 விண்ணப்பங்கள்!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குந்தமங்கலம் அடுத்துள்ள காரந்தூர் 'ஹர ஹர மகாதேவ' திருக்கோயில் கமிட்டி சார்பில், சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச திருமண தகவல் மையப் பதிவு முகாம் நடத்தப்பட்டு வரு... மேலும் பார்க்க

நவம்பர் 24-ம் தேதி வானில் தோன்றும் பிரமாண்ட சூப்பர்மூன் - வானை அலங்கரிக்க வரும் அரிய நிகழ்வு!

"வெண்ணிலவே... வெள்ளி வெள்ளி நிலவே..." என்று பாடல்கள் கொண்டாடும் நிலவை ரசிக்காதவர்கள் யார்? தேய்ந்தும் வளர்ந்தும், சில நேரங்களில் வெண்மையாகவும், சில நேரங்களில் பொன்னிறமாகவும் வானில் வலம் வரும் நிலவு, த... மேலும் பார்க்க

சுப்ரீம் கோர்ட் நீதிபதி என நினைத்து ஒவைசிக்கு மரியாதை செலுத்திய உத்தரபிரதேச போலீஸார்! நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இதற்... மேலும் பார்க்க

7 நாள் கெடு: காங்கிரஸ் தலைவர்கள் கணக்குகளுக்கு கட்டுப்பாடு விதித்த மெட்டா அலுவலகத்தில் தாக்குதல்!

இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் உதய் பானு சிப் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேசிய பொறுப்பாளர் மணீஷ் சர்மா ஆகியோரின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசேஜ்சர் போன்ற சமூக வலைத்தள கணக்குகளை கையாள கட்டுப்பாடுகள் வ... மேலும் பார்க்க

மும்பை பூங்காவுக்கு வந்த தம்பதியை கம்பால் விரட்டி விரட்டி அடித்த சிறார்கள் - பரவும் அதிர்ச்சி வீடியோ

மும்பை குர்லா பகுதியில் உள்ள போனிக்ஸ் மால் வணிக வளாகம் அருகில் பூங்கா ஒன்று இருக்கிறது. அந்த பூங்காவிற்கு காதல் ஜோடி ஒன்று வந்து பேசிக்கொண்டிருந்தது. அப்போது அவர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்துக்க... மேலும் பார்க்க