செய்திகள் :

பாஜக-வுடன் உறவைப் புதுப்பித்த ஆர்எஸ்எஸ்; 6 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் மாதவிற்கு பாஜகவில் முக்கிய பதவி

post image

பா.ஜ.கவின் புதிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் உத்தரப்பிரதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க துணைத்தலைவராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் ராம் மாதவ் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு பா.ஜ.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராம் மாதவ் கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி அரசு பதவியேற்ற்போது ராம் மாதேவை பா.ஜ.கவிற்குப் பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்தது.

கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட ராம் மகாதேவ் வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் பாஜகவை விரிவுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அசாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக அரசுகளை அமைப்பதிலும், கட்சி அமைப்பை வலுப்படுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

ராம் மாதவ்
ராம் மாதவ்

காஷ்மீர் சர்ச்சையில் பதவி பறிப்பு

ஜம்மு-காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி அரசு அமைக்கப்பட்டதில் அவர் முக்கியமாகச் செயல்பட்டார். இந்தக் கூட்டணியால் கட்சிக்கு அரசியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, பிடிபி உடனான உறவை பாஜக பின்னர் முறித்துக்கொண்டது.

அப்போது ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், அம்மாநிலம் தொடர்பான சர்ச்சைகளில் மாதவை இழுக்க முயன்றார். இது அவரது அரசியல் பயணத்தைப் பாதித்தது.

கடந்த 2020ம் ஆண்டு பா.ஜ.க தலைவராக இருந்த ஜெ.பி.நட்டா தனது தலைமையிலான கட்சி நிர்வாகிகளை அறிவித்தபோது அதில் ராம் மாதவ் இடம் பெறவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பணிக்குச் சென்றார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தேசியப் பொறுப்பு வழக்கப்பட்டது.

மோடியால் மீண்டும் பதவி

அவரது தற்போதைய பாஜக வருகை பா.ஜ.கவில் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும். அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்பில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.

2014-ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து பாஜகவிற்கு அவர் மாற்றப்பட்டபோது, ​​அவருக்கு ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியிருந்தது. பிரதமர் மோடியும் அதற்கு உத்தரவாதம் கொடுத்து இருந்தார்.

அதன் அடிப்படையில் இப்போது இப்பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. தேசியத் துணைத் தலைவர் பதவி என்பது கட்சியின் அன்றாட அமைப்புரீதியான பணிகளில் ஈடுபடக்கூடியது கிடையாது.

பொதுவாக இது மூத்த தலைவர்களுக்கே வழங்கப்படுகிறது. இருப்பினும், மாதவ் வெறும் பெயரளவிலான அல்லது சம்பிரதாயமான ஒரு பதவியுடன் மட்டும் இருக்க வாய்ப்பு இல்லை.

எதிர்காலத்தில் நிதின் நபின் அவருக்கு இன்னும் முக்கியமான பொறுப்பு ஒன்றை வழங்கக்கூடும். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரச்சாரக் சுனில் பன்சால் பா.ஜ.க தேசியப் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து இருப்பார்.

ராம் மாதவ்
ராம் மாதவ்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர்களாக உத்தரகாண்டில் இருந்து தீரத் சிங் ராவத், ஒடிசாவைச் சேர்ந்த பைஜயந்த் பாண்டா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டி புரந்தேஸ்வரி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேகா வர்மா மற்றும் பஞ்சாபில் இருந்து சர்தார் மன்பிரீத் சிங் பாதல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாரதி பிரவின் பவார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த லால் சிங் ஆர்யா, கர்நாடகாவைச் சேர்ந்த எம். நாகராஜ், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாரிக் மன்சூர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மதுச்சந்தா கர் ஆகியோரும் தேசியத் துணைத் தலைவர்களாக உள்ளனர்.

``5 வருடங்களில் வர வேண்டிய ஆட்சி மீதான வெறுப்பு 100 நாட்களிலே..." - மா.சுப்ரமணியன் காட்டம்

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பல்வேறு புகழஞ்சலி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் இறுதி நிகழ்வாக சோழிங்கநல... மேலும் பார்க்க

''முன்வரிசையில் நடிகை... வெட்கமே இல்லையா முதல்வரே?'' - முரசொலி நாளிதழ் கடும் தாக்கு

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றியிருந்தார். இதை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று விமர்சித்து தலையங்கம் எழு... மேலும் பார்க்க

VCK: கட்டுக்கடங்காத கூட்டம், தவெக கூட்டணி உறுதி, திருமா பேச்சு - தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு Bytes

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். இன... மேலும் பார்க்க

'கேரளா அல்லா... இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கேரள சட்டமன்றத்தில், அந்த மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்று மாற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய அமைச்சரவை இதற்கு ... மேலும் பார்க்க

"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" - ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

'ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்' என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிற... மேலும் பார்க்க

CJP பாணியில் ‘Dimagi Naxal Party’ - ஒரே நாளில் 1.6 லட்சம் பேர் ஃபாலோ; ஆனால் இப்போது? என்ன ஆனது DNP?

சமூக வலைதளங்களில் புதிதாக உருவான ஒரு Instagram பக்கம், தொடங்கிய ஒரே நாளில் 1.6 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றது. அதைவிட ஆச்சரியம்... வேகமாக வைரலான அந்தப் பக்கம், அதே வேகத்தில் தற்போது காணாமல... மேலும் பார்க்க