செய்திகள் :

``'பாட்ஷா படத்துல ஆட்டோக்காரன் பாடலை முதல்ல பாடியது கிருஷ்ணராஜ் தான்!" - இயக்குநர் நாஞ்சில் அன்பழகன்

post image

இசையமைப்பாளர் தேவா மறைந்த அடுத்த சில தினங்களிலேயே அவரது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜும் மரணமடைந்திருப்பது, தமிழ்த் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை மரணமடைந்த கிருஷ்ணராஜிடம் பழகிய நினைவுகளை இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

நாஞ்சில் பி.சி.அன்பழகன்

``இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக நான் பணிபுரிந்த படங்கள்ல தேவாவும் ஒண்ணு. விஜய், ஸ்வாதி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிச்ச அந்தப் படத்துக்கு இசை தேவா.

அந்தப் படத்துல 'மருமகனே மருமகனே'ன்னு ஒரு பாட்டு இருக்கும். அந்தப் பாட்டை தேவாவுடன் கிருஷ்ணராஜும் சேர்ந்து பாடியிருப்பார்.

படத்தின் உதவி இயக்குநரா இருந்ததால் நான் மியூசிக்குக்காக தேவாவை அடிக்கடி ஸ்டூடியோவுல சந்திப்பேன். அப்படியொரு நாள் நான் அவரைச் சந்திக்கப் போனப்ப, ஸ்டூடியோவுக்குள் ஒருத்தர் பாடிட்டிருந்தார். தேவா அப்ப வெளியாகத் தயாரா இருந்த 'பாட்ஷா' பட மியூசிக்ல பிஸியா இருந்தார்.

பொதுவா இன்னொரு பட வேலை நடந்திட்டிருக்கிற இடத்துல வேறொரு பட யூனிட்டைச் சேர்ந்தவங்களை யாரும் அனுமதிக்க மாட்டாங்க.

பாட்ஷா

ஆனா தேவா மனுஷனை மனுஷனா மதிக்கிற தனது குணத்தாலும், உதவி இயக்குநர்கள் கிட்ட ரொம்பவே பாசமா நடந்துக்கிடறவர்ங்கிறதாலயும், தேடிப் போன என்னை உள்ளே அனுமதிச்சார்.

அங்க நான் போன நேரம் ''பாட்ஷா' படத்தின் 'நான் ஆட்டோக்காரன்' பாடலை கிருஷ்ணராஜ் பாடிட்டிருந்தார். ஒரு ஓரமா நின்னு அவர் பாடினதை நானும் கேட்டேன். பாடி முடிச்சதும், எங்கிட்டயும் 'எப்படி இருக்கு' எனக் கேட்டார் தேவா. உள்ளபடியே அந்தப் பாட்டு கிருஷ்ணராஜ் குரல்ல அவ்வளவு நல்லா இருந்தது. அதைச் சொல்லிட்டு பிறகு நான் போனது தொடர்பா பேசிட்டு வந்துட்டேன்.

அடுத்த கொஞ்ச நாள்ல தேவா, பாட்ஷா ரெண்டு படமும் வெளியாச்சு. 'பாட்ஷா'வுல அந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

பிறகு நான் விசாரிச்சதுல, ரஜினி சார் படம்கிறதால் எஸ்.பி.பி பாடுனா நல்லாருக்கும்னு முடிவாகி, கடைசி நேரத்துல அந்த மாற்றம் வந்துச்சுன்னு கேள்விப்பட்டேன்.

ஆனா பிறகு கிருஷ்ணராஜ் பாடட்டும்னு எஸ்.பி.பி-யே சில பாடல்களை அவருக்குக் கொடுத்ததாகவும் சினிமாவுல ஒரு பேச்சு உண்டு.

Music Director Deva
Music Director Deva

கிருஷ்ணராஜும் தேவாவும் கூடியிருக்கிற நேரங்கள்ல நானும் உடனிருந்திருக்கேன். தமிழ்நாட்டின் பல பகுதிகள்ல இருந்து உள்ளூர் கானா கேசட்டுகளை வாங்கி தேவாகிட்டக் கொண்டு வ‌ருவார் கிருஷ்ணராஜ். ரெண்டு பேரும் மணிக்கணக்கா பாடல்களைக் கேட்டு ரசிப்பாங்க. ரெண்டு மூணு நாள் கூட வீடுகளுக்குப் போகாம இப்படிக் கேட்டுட்டிருப்பாங்க.

இப்ப தேவா மறைஞ்ச ஒரு வாரத்துக்குள்ளாகவே இவரும் அவர் போன இடத்துக்கே போயிட்டார்" என்கிறார் அன்பழகன்.

Haiku: "ஹிப் ஹாப் ஆதி அண்ணா எங்களை பாட வச்ச அந்த மொமன்ட்..!" - அதிர்ச்சி அருண் பேட்டி

ஏகன், ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் என இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் 'ஹைக்கூ' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் அதிர்ச்சி அருணைப் பேட்டி கண்டோம். Haiku Movie'ஹைக்... மேலும் பார்க்க

’தஞ்சாவூரு மண்ணெடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்... தமிழ்த் திரையிசைக்கு மேலும் ஒரு சோகம்

பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார், அவருக்கு வயது 75.சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்.சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம்... மேலும் பார்க்க

Jailer 2: "100% எல்லோரும் ஏற்கும்படி படம் எடுக்க முடியாது" - எதிர்மறை விமர்சனங்களுக்கு சரவணன் பதில்

சரவணன் முதன்மைக் கதாபாத்தித்தில் நடித்திருக்கும் 'சட்டமும் நீதியும்' வெப் தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வெப் தொடரின் செய்தியாளர் ச... மேலும் பார்க்க

"சினிமாவை AI அழித்துவிடாது" - சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏஐ குறும்படம்; சாதனை படைத்த சென்னை இளைஞர்கள்

சென்னையில் இயங்கி வரும் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் நிறுவனமான ஹைபிரிட் ஸ்டுடியோ சமீபத்தில் 'விங்ஸ் ஆஃப் ஃபையர்' என்கிற குறும்படத்தை வெளியிட்டிருந்தது. Hybrid Studio Teamஅது முழுக்க முழுக்க ஏ.ஐ-யால் உர... மேலும் பார்க்க

Jailer 2: "Startup, Comics எழுத்தாளர், இயக்குநர் ஆசை..." - ரித்விக் பகிரும் 'Future Plans'!

'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரித்விக்கைப் பேட்டி கண்டோம். 'ஜெயிலர் 2' அனுபவம், படப்பிடிப்புத் தள... மேலும் பார்க்க

``சக மனிதர்களைப் படிக்கிறேன்... அதன்படி நடிக்கிறேன்!'' - நடிகர் அருள்தாஸ் | Photo Album

நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்... மேலும் பார்க்க