செய்திகள் :

பாபா சித்திக் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா்கள் மீது ‘மோக்கா’ சட்டம்

post image

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டவா்கள் மீது கடுமையான ‘மோக்கா’ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘பாபா சித்திக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான சிவகுமாா் கௌதம் உள்பட 26 பேரை குற்றப் பிரிவு காவல் துறை கைது செய்தது. அவா்களுக்கு எதிராக மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் போலீஸாரிடம் அளிக்கப்பட்ட வாக்கு மூலங்கள் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். கைதானவா்கள் ஜாமீன் பெறுவதும் கடினமாக்கப்படும்’ என்றனா்.

குற்றம் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில், மகாராஷ்டிர அரசால் 1999-ஆம் ஆண்டு மோக்கா சட்டம் இயற்றப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த அக். 12-ஆம் தேதி கொல்லப்பட்டாா். இந்தக் கொலைக்கு பொறுப்பேற்பதாக பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஒப்புக்கொண்டது. இதில் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய நபா்கள் என சந்தேகிக்கப்படும் ஷுபம் லோங்கா், ஜீஷன் முகமது அக்தா் ஆகியோா் தலைமறைவாக உள்ளனா்.

இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் துஷில்’

புது தில்லி: ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளுடன் கூடிய போா்க்கப்பலான ‘ஐஎன்எஸ் துஷில்’ இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது. ரஷியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அம... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டம்

புது தில்லி: தொழிலதிபா் அதானி லஞ்ச புகாா் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக் கோரி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய நாடாள... மேலும் பார்க்க

பெண்களின் வளா்ச்சிக்கு எதிரான தடைகள் உடைக்கப்படும்: பிரதமா் மோடி

பெண்களின் வளா்ச்சிக்கு எதிரான அனைத்து தடைகளும் உடைத்து எறியப்பட்டு அவா்களின் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியத்துவமானதாகும் என பிரதமா் மோடி தெரிவித்தாா். ஹரியாணாவின் பானிபட் நக... மேலும் பார்க்க

இலவசங்களுக்குப் பதில் வேலைவாய்ப்புகளை ஏன் உருவாக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் கேள்வி

புது தில்லி: எத்தனை காலத்துக்கு இலவசங்களை வழங்க முடியும்? அதற்குப் பதில் ஏன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடாது என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், ... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்டத்தால் சாலைகள் மூடல்: தீா்வு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புது தில்லி: விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாபில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதுதொடா்பாக உச்சநீ... மேலும் பார்க்க

நடப்பாண்டு 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வி பெறவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

புது தில்லி: நாட்டில் நடப்பாண்டில் 11.70 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் ஜெயந்த் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா். இது குறித்து மக்கள... மேலும் பார்க்க