செய்திகள் :

பாரம்பரியத் தமிழர் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விஐடி சென்னை!

post image

பாரம்பரியத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் தனித்துவ முயற்சியாக, விஐடி சென்னையில் மாணவர்களின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு ஆராய்ச்சி மையம் விஐடி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில், பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், பரமபதம், ஐந்து கல் போன்ற விளையாட்டுகளின் மூலம் மாணவர்களின் நினைவாற்றல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், மன அமைதி போன்ற அம்சங்களில் ஏற்படும் மாற்றங்கள் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட உள்ளன.

இந்த மையம் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவுசார் அமைப்பு (Indian Knowledge Systems) பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்த மையத்தைத் திறந்து வைத்து விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி. செல்வம் பேசுகையில், “பாரம்பரியத் தமிழர் விளையாட்டுகள் பல தலைமுறைகளாக குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. குறிப்பாகக், குழந்தைகளின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல், திட்டமிடல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் மற்றும் சமூக உறவை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பெரும்பங்க்கு வகித்தன. ஆனால் இவை இன்றைய காலத்தில் மெதுவாக மறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுப்பதற்கு இந்த மையத்தின் செயல்பாடுகள் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம், என்றார்.

இந்த மையத்தில் ஒவ்வொரு விளையாட்டும் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும். அதாவது, ஐந்து கல் விளையாட்டு பார்வை மற்றும் காணொளித் திறனுக்கும், பல்லாங்குழி அறிவாற்றலை வளர்ப்பதற்கும், தாயம் திட்டமிடல் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், ஆடுபுலி ஆட்டம் நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் வளர்ப்பதற்கும், பரமபதம் வாழ்க்கை சவால்களை சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்ப்பது ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்யப்படும்.

மேலும், இந்த மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள திருக்குறள் குறட்பாக்கள் மனித உணர்வு, நெறிமுறைகள், உணர்ச்சிக் கட்டுப்பாடு, தலைமைத்துவம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்யும். திருமந்திரத்தில் உள்ள மூச்சுப்பயிற்சி, உணர்வுகள் மற்றும் மனம் உடல் இடையேயான தொடர்பு பற்றிய கருத்துகளும் இந்த ஆய்வில் இடம்பெறுகின்றன. இந்த மையத்தில் இடம் பெற்றுள்ள தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் திருக்குறள் குறட்பாக்களும் மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

“பழந்தமிழ் மரபுகளையும், பண்பாடுசார் பழக்கவழக்கங்களையும் அறிவியல் அடிப்படையில் மதிப்பீடு செய்வது மற்றும் மாணவ - மாணவியரின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்துவது போன்றவை இந்த மையத்தின் குறிக்கோள்களாகும். வரும் காலங்களில் இது போன்று இன்னும் பல தமிழர் விளையாட்டுகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு அதை இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டுளோம்,” என்று இந்த மையத்தின் முதன்மை ஆய்வாளர் முனைவர் கணேஷ், இணை ஆய்வாளர் முனைவர் விஜயபானு ஆகியோர் தெரிவித்தனர்.

இந்திய அறிவு மரபை அடிப்படையாகக் கொண்டு தமிழ் விளையாட்டுகளை உருவாக்குவது, பழமையான அறிவைப் பாதுகாப்பதற்கான முயற்சி மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறைக்கு பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து வழங்கும் புதுமையான கல்விப் பயணமாகும். இதன் மூலம் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் இந்திய அறிவு மரபு உலக அரங்கில் புதிய பரிமாணத்தை அடையும்.

அப்பாவின் நம்பிக்கை... மகளின் உழைப்பு... NEET-ல் வெற்றிக் கதை எழுதிய சந்தியா!

NEET... இந்த நான்கு எழுத்து தேர்வு, லட்சக்கணக்கான மாணவர்களின் கனவையும், பல வருட உழைப்பையும் சோதிக்கும் ஒரு பெரிய பயணம். இந்த பயணத்தில் வெற்றி என்பது வெறும் மார்க் மட்டும் கிடையாது; தன்னம்பிக்கை, விடாம... மேலும் பார்க்க

சேலம்: ISO தரச்சான்று பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசு தொடக்கப்பள்ளி! - சாதித்தது எப்படி?

தமிழ்நாட்டில் விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அடித்தளம் அமைத்துக் கொடுத்த அரசுப் பள்ளிகள் பலவற்றில் தற்போது மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவு எனச்சொல்லி மூடப்பட்டு வருகின்றன. பொதுப் பள்ள... மேலும் பார்க்க

நீட் தேர்வில் வென்ற ஏற்காடு மலைவாழ் கிராம மாணவி நிவேதா; முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

ஏற்காட்டில் உள்ள குண்டூர் என்னும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் மணிமேகலை தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் நிவேதா.இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்ச... மேலும் பார்க்க

திறன் மேம்பாடு டு சர்வதேச பணி: ஜெர்மனி கல்வி நிறுவனத்துடன் சென்னைஸ் அமிர்தா கைக்கோர்ப்பு!

இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முன்னெடுப்பாக, லாஜிஸ்டிக்ஸ் செக்டர் ஸ்கில் கவுன்சில் (Logistics Sector Skill Council - LSC), ஜெர்மனியின் பெர்லினில் அமைந்துள்ள BBW Hoch... மேலும் பார்க்க

2026 பட்டதாரிகளுக்கு சிறப்பு உதவித்தொகையை அறிவித்த வெராண்டா பையர்!

வெராண்டா லெர்னிங் நிறுவனத்தின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் (BFSI) துறைக்கான திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவான வெராண்டா பையர், 2026 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்காக சிறப்ப... மேலும் பார்க்க