செய்திகள் :

பாலியல் வழக்கு நோ... அவதூறு வழக்கு யெஸ் டு தொகுதி மறுவரையறை: குழப்பத்தில் திமுக MP-க்கள்! | கழுகார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிரணி ஆணையமே அறிக்கை கேட்டிருக்கும் சூழலிலும் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. துணை சபாநாயகர் ரவிசங்கர் மனு கொடுக்க வந்தவரைத் தாக்கிய நிலையில் அவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் த.வெ.க-வினரை சமூக வலைதளங்களில் விமர்சித்த நா.த.க கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்மீது அவதூறு வழக்குப் பதிந்திருக்கிறது காவல்துறை.

அருள் விக்னேஷ்

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் திருடிய மீனாட்சி என்பவர் த.வெ.க நிர்வாகி என்ற எக்ஸ் தள பதிவுக்காக எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறது. த.வெ.க ஆட்சியமைந்த நாளிலிருந்து சாட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சிப்பதால் அவரைக் கைதுசெய்ய ஆட்சி மேலிடம் விரும்புவதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆட்சியில் இருந்தபோது தொகுதி மறுவரையறைக்கு எதிராகக் களமாடிய தி.மு.க., இப்போது தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் இருப்பதால், அக்கட்சியின் எம்.பி-க்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

கனிமொழி
கனிமொழி

தி.மு.க ஆட்சியின்போது சென்னையில் நடைபெற்ற கூட்டுச் செயற்குழு மாநாட்டில், 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு மாற்றாமல் வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது, நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால், அதை ஆதரிக்கும் மனநிலைக்குத் தி.மு.க வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். த.வெ.க அரசை எதிர்கொள்ள டெல்லியுடன் தி.மு.க நெருக்கம் காட்டுவதாகச் சொல்லப்படும் நிலையில், “மசோதாவைப் படித்துவிட்டு முடிவெடுப்போம்” என்று தெரிவித்திருக்கிறார் தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முத்தம்மாள் காலனி பகுதியிலுள்ள ரஹமத் நகரில் சட்டவிரோத சூதாட்ட கிளப் மற்றும் முழு நேர மதுவிற்பனை கூடாரங்களை நடத்தி வந்திருக்கிறார் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி திருச்சிற்றம்பலம். தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சருமான ஶ்ரீநாத் அவர்களின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் திருச்சிற்றம்பலம் என்பவர் சிப்காட் காவல்நிலைய அதிகாரிகளுக்கு முறையான மாமூல்களை வழங்கி வருவதோடு இத்தகைய சூதாட்ட கிளப்களை சட்டவிரோதமாக நடத்திட அமைச்சரின் பெயரைக் கூறி பல்வேறு தரப்பினரை மிரட்டி வருவதாக சொல்லப்பட்டது.

இவ்விவகாரம் பூதாகரமான நிலையில். சிப்காட் காவல் ஆய்வாளர் தனசேகரன், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நவம்பர் 16-ம் இரவு எட்டரை மணியளவில் திடீர் சோதனை செய்ததில், சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த நான்கு நபர்களை கைது செய்திருக்கிறார்கள். “கிளப் நடத்திய திருச்சிற்றம்பலத்தை கைது செய்யாததன் மர்மம் என்னவோ?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் தூத்துக்குடிவாசிகள்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலிருந்து சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ் வெளியேறிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தலைமையிலிருந்து வெளியான ஆர்ப்பாட்டம் தொடர்பான அறிவிப்பில் ராகேஷ் பெயர் இடம்பெற்றிருந்தது.

குமரகுரு

சி.வி சண்முகத்தின் ஆதரவாளராக ராகேஷ் கருதப்படுவதால் ஆர்ப்பாட்ட மேடையிலேயே, ‘இவன் ஏன் இங்க வர்றான். இவன்கிட்ட எல்லாம் மைக்கைக் குடுக்காதீங்க’ என மாவட்டச் செயலாளர் குமரகுரு பேச, உடனடியாக கோபமாக இறங்கிச் சென்றுவிட்டார் ராகேஷ். “எடப்பாடி பழனிசாமியே அரவணைக்க நினைத்தாலும், இவரைப் போன்றவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள். கட்சிக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியா, இல்லை குமரகுருவா?” என முணுமுணுக்கிறார்கள் ராகேஷின் ஆதரவாளர்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக புதுப் பிரச்னை கிளம்பியிருக்கிறது. மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளதாக கேள்வி எழுப்பியிருக்கிறது தி.மு.க. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுக்காமல் இருப்பது த.வெ.க-வை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கிறது. எனினும் தமிழக ஃபேக்ட் செக் குழு, உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “போலியான புத்தகங்களை வாங்கிய பாவங்கள் கழிய வேண்டுமென்றால், அந்தப் புத்தக அலமாரிகளில் மகா பெரியவரின் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதை விமர்சித்த எம்.பி. சு வெங்கடேசன், “நூலகக் கொள்முதலில் ஊழல் நடந்திருந்தால், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் அதுதான் நீதியரசர்களின் வேலை.”

ஜி.ஆர். சுவாமிநாதன் vs சு.வெங்கடேசன்
ஜி.ஆர். சுவாமிநாதன் vs சு.வெங்கடேசன்

ஆனால், நடந்தது பாவம் என்றும், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்றும் கூறுவது ஜோதிடர்களின் வேலை” என நீதிபதியைச் சாடியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, “நான் மதுரை ரயில் நிலையத்துக்குச் செல்லும்போது உயர் ரக காரில், ஆடம்பர உடையில் ஒருவர் வந்தார். யாரோ கார்ப்பரேட் முதலாளி என நினைத்தபோது, அது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன்தான் என்று தெரிந்துகொண்டேன். அவர் ரயிலின் முதல் வகுப்புக்குச் சென்றார். நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன்” என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்குப் பதிலளித்த சு.வெங்கடேசன், “அந்தக் கார் எனக்குச் சொந்தமானதல்ல. எம்.பி-க்களுக்கு வழங்கப்படும் பயணச் சலுகையின்படியே முதல் வகுப்பில் பயணித்தேன்” என்று சொல்லியிருக்கிறார். இப்போதைக்கு இவர்களின் மோதல் ஓயாதுபோல!

புதினுடன் எங்கும் செல்லும் ‘செகெட்’ அது என்ன? அந்தப் பெட்டியால் அணு ஆயுதங்களை ஏவ முடியுமா?

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கான சீனாவின் ஷென்சென் நகருக்குச் சென்றிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். அங்கு அவருடன் இரண்டு ரஷ்ய கடற்படை அதிகாரிகள் ஒரு பெட்டியை எடுத்துச் செல்க... மேலும் பார்க்க

கைகளைக் கட்டிப்போட்டு மாணவனைத் தாக்கிய ஆசிரியர்; திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சாய்ராம் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (33) என்பவரின் 3 வயது... மேலும் பார்க்க

உடுமலை: அலட்சிய மருத்துவமனையால் பறிபோன இளைஞரின் கால்; ரூ. 35.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருப்பூர் மாவட்டம் மருள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தினேஷ்குமார் (24) 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு, உடுமலை அரசு மருத... மேலும் பார்க்க

`தலைமைக்குப் புகார்... அனுப்பியவர் மீதே நடவடிக்கையா?' - வெடிக்கும் பெரம்பலூர் விசிக விவகாரம்

"கட்சிப் பெயரைப் பயன்படுத்தி, எங்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கட்டப்பஞ்சாயத்து, கட்சிக்கு விரோதமான செயல், குற்றச் செயல்களில் ஈடுபட்டது பற்றித் தலைமைக்குப் புகார் அனுப்பினேன். உடனே, நான் வகித்து வந்த மா... மேலும் பார்க்க

"எனது கைக்கடிகாரத்தின் விலை ரூ.5,500 மட்டுமே" - வதந்திக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

அமைச்சர் ராஜ்மோகன் அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ரூ. 45,00,000 அளவுக்கு இருக்கும் என்றும், அது மிகவும் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் வகையைச் சேர்ந்தது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்ட... மேலும் பார்க்க