செய்திகள் :

'பிகில், கோட் பட தயாரிப்பாளருக்கு புதிய அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' - விவரம் என்ன?

post image

முதல்வர் விஜய்யை வைத்து பிகில், கோட் போன்ற படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி, அறங்காவலர் நியமனக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அர்ச்சனா கல்பாத்தி - விஜய்
அர்ச்சனா கல்பாத்தி - விஜய்

ஆண்டுக்கு 10 லட்ச ரூபாயுக்கும் மேல் வருவாய் உள்ள கோயில்களுக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களை அழைத்து அறங்காவலரை நியமிக்க 7 பேர் கொண்ட குழுவை அறநிலையத்துறை நியமித்திருக்கிறது. அந்த 7 பேரில் அர்ச்சனா கல்பாத்தியும் ஒருவர்.

அவருக்கு இந்த குழுவின் உறுப்பினர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமத்தை சேர்ந்தவர். முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது 2019 இல் பிகில் படத்தையும் 2024 இல் கோட் என்கிற படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விஜய்யின் படங்களை தயாரித்திருப்பதாலும், முதல்வருக்கு 'மிக நெருங்கிய' வட்டத்தை சேர்ந்த சிலரின் சிபாரிசாலும் அர்ச்சனாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கோட்டையில் கிசுகிசுக்கின்றனர்.

அர்ச்சனா கல்பாத்தி

ஏற்கெனவே ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு டெல்லி பிரதிநிதி பதவியும், ஆன்லைன் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குருவுக்கு தகவல் சரிபார்ப்புக் குழுவின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்?

மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.ஏன் இந்த ஒப்பந்தம்? இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: ``பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" - முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' - தவெக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது.பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்?" - காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 8) நடைபெற்றது. இதில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் 1... மேலும் பார்க்க

ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!

ஈரான் விஷயத்திலும் சரி... காசா விஷயத்திலும் சரி... அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைவலியாக மாறி வருகிறார். நெதன்யாகு பேச்சு"ஹமாஸ் உண்மையிலுமே முழுவதுமாக எப்போது ஆயுதமற்று ஆகிறத... மேலும் பார்க்க

`இளம் வயதினருக்கு வாய்ப்பு கொடுங்கள்' - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மன்னார்குடி நிர்வாகி கோரிக்கை

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு `வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை முன் வைத்தது திமுக தலைமை. 200 தொகுதிகளில் வெற்றி பெற்றி திமுக ஆட்சியை தக்க வைக்கும் என அப்போதைய முதல்வர் ஸ்டாலின் உறுதிய... மேலும் பார்க்க