செய்திகள் :

" 'பிச்சைக்காரன் 3' அடுத்தாண்டு அயூத பூஜைக்கு வரும்!" - விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!

post image

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அப்பாகுட்டி' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இயக்குநர் மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

நேற்றைய தினம் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் 'பிச்சைக்காரன் 3' படம் தொடர்பாக விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார்.

Vijay Antony - Appakutty
Vijay Antony - Appakutty

அவர், "'பிச்சைக்காரன் 3' திரைப்படம் குறித்த அறிவிப்பை இந்த நிகழ்வில் வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி. இப்படத்தின் படப்பிடிப்பிற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என்று நம்புகிறோம். இதனைத் தொடர்ந்து, 'அயோத்தி' பட இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் படமும் தயாராகி வருகிறது.

இப்படத்தின் பணிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தத் திரைப்படம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும்" என்றவர், "'பிச்சைக்காரன்' முதல் பாகத்தின் ஆடியோ உரிமையை விற்பனை செய்ய முயன்றபோது, பல நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை.

அவர்களிடம் 'நூறு சாமிகள் இருந்தாலும்...' பாடலைப் போட்டுக் காட்டியபோது, 'இந்தக் காலத்தில் அம்மா பாடல்கள் எல்லாம் வொர்க் அவுட் ஆகாது சார்' என்று கூறி நிராகரித்துவிட்டனர்.

வழக்கமான விலையை விட வெறும் 10 சதவீதத் தொகையை மட்டுமே அவர்கள் ஆஃபர் செய்ததால், அந்தப் படத்தின் ஆடியோ உரிமையை யாருக்கும் கொடுக்காமல் நானே வைத்துக்கொண்டேன்.

ஆனால், படம் வெளியான பிறகு அந்தப் பாடல் அடைந்த பிரம்மாண்ட வெற்றி அனைவருக்கும் தெரியும். அதேபோன்ற ஒரு சூழல்தான் தற்போதும் நடந்துள்ளது.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

இதில் இடம்பெற்றுள்ள உணர்வுப்பூர்வமான அப்பா பாடலைக் கேட்டுவிட்டு சிலர், 'இப்போதெல்லாம் இந்த மாதிரியான பாடல்களை யாரும் கேட்பதில்லை' என்று கூறினார்கள். எனக்கு 'பிச்சைக்காரன் 1' படம்தான் நினைவுக்கு வந்தது.

அன்றைக்கு அம்மா பாடலுக்கு என்ன நடந்ததோ, அதேபோல்தான் இந்த ஆல்பமும், திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்துள்ளது. இது மிகச் சிறந்த எமோஷனல் பாடல்கள் அடங்கிய ஒரு திரைப்படமாக இருக்கும்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Atlee: "நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!" - மனைவி பிரியா அட்லீ குறித்து அட்லீ

இயக்குநர் அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி தங்களின் 12-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். Atlee and Priya Atleeஇவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் 18 ஆண்டு கால நட்பு குறித்து அட்லீ தனது சமூக வல... மேலும் பார்க்க

SCENE: 'சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங்; நஸ்லென் இந்த துறையை ஆளப்போகிறார்'- அட்லீ பாராட்டு

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் வெளியாகி இருக்கிறது. சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்க... மேலும் பார்க்க

``யூடியூபுக்கே முழு நேரம் செலவழிக்க வேண்டியதாகிடுச்சு; ஆனா இப்போ...''- சித்ரா லட்சுமணன் கம்பேக்!

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், திரைப்பட விமர்சகர் என முகமாக ஜொலிப்பவர் சித்ரா லட்சுமணன். `பிரம்மச்சாரி' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள... மேலும் பார்க்க

``ரத்தப் பரிசோதனைக்கு நான் தயார்!" - பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் ரெய்டு

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ன் ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ். இவரது வீட்டில் நேற்று (நவம்பர் 8) இரவு போதைப் பொருள் சம்பந்தமான ரெய்டு நடந்துள்ளது.தன்னுடைய வீட்டில் நேற்று இரவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் ... மேலும் பார்க்க

"வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்!" - சூர்யா 'ஓபன்' டாக்

தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்குப் பிறகு, பல நடிகர்களின் அரசியல் என்ட்ரிக்கான அறிகுறிகள் தொடர்ந்து தெரிந்து வருகின்றன.இதன் ஒரு படியாக, நடிகர் தனுஷ் அடுத்தடுத்த நடவடிக்கைகளை... மேலும் பார்க்க