செய்திகள் :

Atlee: "நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!" - மனைவி பிரியா அட்லீ குறித்து அட்லீ

post image

இயக்குநர் அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி தங்களின் 12-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

Atlee and Priya Atlee

இவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் 18 ஆண்டு கால நட்பு குறித்து அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "உலகம் எனது வெற்றிகளைக் கொண்டாடலாம். ஆனால், இன்று நான் எட்டியுள்ள அனைத்து உயரங்களுக்கும் உனது நிபந்தனையற்ற அன்பும், என் மீது நீ கொண்ட நம்பிக்கையும்தான் அடிப்படைக் காரணம் என்பது எனக்குத் தெரியும்.

ஒரு சிறுவனாக இருந்த என்னை ஒரு பொறுப்பான ஆணாகவும், கணவனாகவும், தந்தையாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல மனிதனாகவும் மாற்றியிருக்கிறாய்.

Atlee & Priya Atlee
Atlee & Priya Atlee

12 வருட திருமண வாழ்க்கை மற்றும் கிட்டத்தட்ட 18 வருட நட்பு அழகானது. என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய வெற்றி எப்போதுமே நீ என் அருகில் இருப்பதுதான். நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை.

நீ இருந்தால் என்னிடம் எல்லாமே இருக்கிறது. என் சிறந்த தோழியாக, அன்பாக, பலமாக எல்லாவற்றிலுமாக இருப்பதற்கு நன்றி. ஒவ்வொரு நாளும் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இனிய 12-வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள் என் சுஜி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

SCENE: 'சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங்; நஸ்லென் இந்த துறையை ஆளப்போகிறார்'- அட்லீ பாராட்டு

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் வெளியாகி இருக்கிறது. சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்க... மேலும் பார்க்க

``யூடியூபுக்கே முழு நேரம் செலவழிக்க வேண்டியதாகிடுச்சு; ஆனா இப்போ...''- சித்ரா லட்சுமணன் கம்பேக்!

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், திரைப்பட விமர்சகர் என முகமாக ஜொலிப்பவர் சித்ரா லட்சுமணன். `பிரம்மச்சாரி' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள... மேலும் பார்க்க

``ரத்தப் பரிசோதனைக்கு நான் தயார்!" - பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் ரெய்டு

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ன் ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ். இவரது வீட்டில் நேற்று (நவம்பர் 8) இரவு போதைப் பொருள் சம்பந்தமான ரெய்டு நடந்துள்ளது.தன்னுடைய வீட்டில் நேற்று இரவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் ... மேலும் பார்க்க

"வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்!" - சூர்யா 'ஓபன்' டாக்

தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்குப் பிறகு, பல நடிகர்களின் அரசியல் என்ட்ரிக்கான அறிகுறிகள் தொடர்ந்து தெரிந்து வருகின்றன.இதன் ஒரு படியாக, நடிகர் தனுஷ் அடுத்தடுத்த நடவடிக்கைகளை... மேலும் பார்க்க

``சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளியோ, பொங்கலோ ஞாபகத்தில் இல்லை" - நடிகர் தனுஷ் உருக்கம்

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா(90) கடந்த மாதம் 11-ம் தேதி இயற்கையெய்தினார். மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே ... மேலும் பார்க்க