செய்திகள் :

``யூடியூபுக்கே முழு நேரம் செலவழிக்க வேண்டியதாகிடுச்சு; ஆனா இப்போ...''- சித்ரா லட்சுமணன் கம்பேக்!

post image

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், திரைப்பட விமர்சகர் என முகமாக ஜொலிப்பவர் சித்ரா லட்சுமணன். `பிரம்மச்சாரி' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . சூர்யாவின் 'கருப்பு' படத்துக்கு முன்னர் நடிப்புக்கு சின்னதொரு இடைவெளி விட்டிருந்தவர், இப்போது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். சமீபத்திய 'மகுடம்' படத்தில் டாக்டர் ஆக நடித்தவர், இப்போது வரவிருக்கும் இரண்டு படங்களில் டாக்டர் ஆக நடித்துள்ளார்.

இது குறித்து சித்ரா லட்சுமணனிடம் பேசினால், தனது அக்மார்க் சிரிப்புடன் பேச ஆரம்பித்தார்.

சித்ரா லட்சுமணன்

``ரொம்பவே சந்தோஷமா இருக்கு. 'கருப்பு' படத்துக்கு முன் நடிப்புக்கு சின்னதா ஒரு இடைவெளி ஆகிடுச்சு. ஏன்னா, யூடியூப்புக்கே முழு நேரம் செலவழிக்க வேண்டியதாகிடுச்சு. இப்போ அததுக்கான ஆட்கள் நியமிச்சுட்டதால நேரம் அமைஞ்சிடுச்சு. மத்தபடி வேறந்த காரணமுமில்ல. 'கருப்பு'க்கு கிடைச்ச வரவேற்புக்கு பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டர்கள் தேடி வருது. இப்போ 'அப்பாகுட்டி', 'வாண வேடிக்கை', 'ரீ மேட்ச்', 'மேரி கோல்ட்'னு பல படங்கள் கைவசம் இருக்கு. விஷாலோட 'மகுடம்' படத்துல டாக்டரா நடிச்சேன். அதன் பிறகு இப்போ நடிக்கிற 'அப்பா குட்டி', 'ரீ மேட்ச்' ரெண்டிலும் டாக்டர் தான்.

சித்ரா லட்சுமணன்

என்னோட கரியர்ல ஒரே சமயத்துல இப்படி டாக்டரா நடிச்சதில்லை. இப்படி வாய்ப்பு மத்த நடிகர்களுக்கு அமைஞ்சிருக்கலாம். ஆனா, ஒவ்வொரு படத்துலேயும் ஒவ்வொரு விதமான டாக்டர்ங்கறதால சுவாரஸ்யமா இருக்கு. 'மகுடம்'ல டாக்டரே கொஞ்சம் கோளாறானவரா இருப்பார். அப்படியொரு ரோல். இப்போ விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி'யில நேர்மையான ஒரு டாக்டர். படத்தின் திருப்புமுனையாகவும் இருக்கும். அடுத்து வரும் `ரீ மேட்ச்'ல காமெடி கலந்த டாக்டர். இது தவிர, சண்முகப்பாண்டியோட 'வாண வேடிக்கை'யிலும் பிரபு, சுகன்யா நடிக்கும் 'மேரி கோல்ட்'லேயும் முக்கியமான ரோல்ல நடிச்சிட்டிருக்கேன். அடுத்தடுத்து நல்ல ரோல்கள் அமையறதால திரைப்பயணமும் இனிமையா இருக்கு!'' எனக் கூறி மகிழ்கிறார் சித்ரா லட்சுமணன்.

SCENE: 'சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங்; நஸ்லென் இந்த துறையை ஆளப்போகிறார்'- அட்லீ பாராட்டு

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் வெளியாகி இருக்கிறது. சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்க... மேலும் பார்க்க

``ரத்தப் பரிசோதனைக்கு நான் தயார்!" - பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் ரெய்டு

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ன் ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ். இவரது வீட்டில் நேற்று (நவம்பர் 8) இரவு போதைப் பொருள் சம்பந்தமான ரெய்டு நடந்துள்ளது.தன்னுடைய வீட்டில் நேற்று இரவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் ... மேலும் பார்க்க

"வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்!" - சூர்யா 'ஓபன்' டாக்

தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்குப் பிறகு, பல நடிகர்களின் அரசியல் என்ட்ரிக்கான அறிகுறிகள் தொடர்ந்து தெரிந்து வருகின்றன.இதன் ஒரு படியாக, நடிகர் தனுஷ் அடுத்தடுத்த நடவடிக்கைகளை... மேலும் பார்க்க

``சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளியோ, பொங்கலோ ஞாபகத்தில் இல்லை" - நடிகர் தனுஷ் உருக்கம்

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா(90) கடந்த மாதம் 11-ம் தேதி இயற்கையெய்தினார். மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே ... மேலும் பார்க்க

Scene: "'எனக்கு 'சீன்' படத்துல பிடிச்ச பாட்டு இதுதான்'னு சூர்யா சார் சொன்னார்!" - விஜய் நரேன் பேட்டி

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கி... மேலும் பார்க்க